என்னயா விஜய அலமாரிகுள்ள நின்னு பாட வச்சிருக்கீங்க...சீக்ரெட் சொன்ன ஜான் மகேந்திரன்
சச்சின் படத்தில் இடம்பெற்றுள்ள வாடி வாடி பாடலை விஜயின் பெட் ரூம் அலமாரியில் இருந்து பாடியதாக படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் இன்னும் ஒரு படத்தோடு திரை வாழ்க்கையில் இருந்து விலக இருக்கிறார். ஜன நாயகன் படத்தின் ரிலீஸூக்கு ஒருபக்கம் ரசிகரகள் ரெடியாகி வரும் நிலையில் மறுபக்கம் விஜயின் சச்சின் திரைப்படம் கோடை விடுமுறையில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது
சச்சின் ரீரிலீஸ்
சச்சின் படம், 2005 ஆம் ஆண்டு வெளியானது, விஜய் மற்றும் ஜெனிலியா நடித்துள்ள ஒரு பெரும் வெற்றிப் படம் ஆகும். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த படம் ரீ ரிலீசாக வருகின்றது.
Just In




சச்சின் படத்தில் ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ளார், அதேபோல், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தில் மிகுந்த நகைச்சுவை காட்சிகளை வடிவேலு கொடுத்துள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் அங்கீகாரம் பெற்றது. விடி விஜயன் ஒளிப்பதிவுக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார், மேலும், படத்தின் ஒளிப்பதிவு, இசை, நகைச்சுவை மற்றும் நடிப்பு என அனைத்தும் மாபெரும் வெற்றிக்கான காரணமாக அமைந்தது.
இந்த படத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா இருவரின் காதல் காட்சிகளும், வடிவேலுவின் கமெடி காட்சிகளும் ரசிகர்களின் இதயங்களை வென்றன. கடந்த ஆண்டு விஜயின் கில்லி திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டிய நிலையில் தற்போது சச்சின் படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சச்சின் படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்
அலமாரிக்குள் பாட்டு பாடிய விஜய்
" இசையமைப்பாளர் டி.எஸ்.பி பிறவியில் இருந்தே குழந்தையின் உற்சாகம் கொண்டவர். சச்சின் படத்தின் வாடி வாடி பாடல் பற்றி விஜய் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். உடனே இங்கேயே ரெக்கார்ட் செய்துவிடலாம் என்று டி.எஸ்.பி சொன்னார். உடனே கம்ப்யூட்டரை எடுத்து தட்ட தொடங்கினார். ரெக்கார்ட் செய்ய ஒரு இடம் வேண்டும் என்று விஜயின் பெட் ரூமில் இருக்கும் அலமாரியை திறந்துவிட்டார். விஜயும் இவர்களை வீட்டிற்குள் விட்டது தப்பா போச்சேனு நினைத்துவிட்டார். உடனே உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வெளியே போட்டுவிட்டு விஜயை சார் வந்து பாடுங்கனு சொல்லிட்டார். இந்த தகவலை இதுவரை நான் வெளியே சொல்லவில்லை ஆனால் அந்த பாடலை விஜயின் அலமாரியில் இருந்துதான் பாடினார். " என ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்