பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சூட்டிங், ரிலீஸ், ப்ரோமோஷன் எனத் தொடர்ந்து பிஸியாக இருந்து வந்த நடிகை திரிஷா, கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதனால் பதிறிப்போன ரசிகர்கள் த்ரிஷாவின் காலில் எப்படி காயம் ஏற்பட்டது என்று குழம்பிப் போயிருந்தனர்.




இதைத் தொடர்ந்து அவர் விடுமுறைக்கு சென்று திரும்பியபின், வீட்டில் மாடிப்படி ஏறும் பொழுது கால் இடறி காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் பெரிய காயம் எதுவுமில்லை சிறிய தசை வீக்கம் தான்…சில நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்றும் கூறப்பட்டது.






இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று இரவு நடைபெற்றது. அதில் நடிகை த்ரிஷா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு கொண்டாடினர்.




 இந்த நிலையில் இன்று நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் தனது காலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்‌. அதில் வீக்கம் அடைந்த காலின் மேல் ஐஸ் பேக் வைத்திருப்பது போல் போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, எனக்கு நானே கூறிக்கொள்ளும் அறிவுரை இது:- "காலில் காயம் ஏற்பட்டிருக்கும் பொழுது  சக்சஸ் பார்ட்டியில் டான்ஸ் நடனம் ஆடாதே!"  என்று குறிப்பிட்டுள்ளார்.


பூஜா ஹெக்டே


இதேபோல் இரண்டு வாரங்களுக்கு முன் நடிகை பூஜா ஹெக்டேவின் காலில் அடிபட்ட நிகழ்வு குறிப்பிடத்தக்கது.



தமிழில் முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதைத்தொடர்ந்து அவர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டில் இரண்டு படங்கள் நடித்து வரும் அவர், சல்மான் கானுக்கு ஜோடியாக 'கிஷி கா பாய் கிஷி கா ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது‌. 


இரண்டு வாரங்களுக்கு முன் பூஜா ஹெக்டே காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. தொடர்ந்து நடிகைகளின் காலில் காயம் ஏற்படும் நிகழ்வு சினிமா வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.