2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த கைதி திரைப்படம், தற்போது 'போலா' என்ற பெயரில் ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 



சூப்பர் டூப்பர் ஹிட் :


தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக முன்னேறி இளைஞர்களின் மிகவும் ஃபேவரட் இயக்குநராக வெற்றி நடை போட்டு  வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் மக்கள் மனதில் பதிய ஒரு அடையாளமான திரைப்படமாக அமைந்தது கைதி திரைப்படம். நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவான இப்படத்தில் பாடல், ஹீரோயின் என எந்த ஒரு என்டர்டெயின்மென்ட் சமாச்சாரமும் இல்லை என்றாலும் திரைக்கதையை மட்டுமே நம்பி வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. 


ரீமேக் செய்யப்படும் தமிழ் படங்கள் :


தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரும் நிலையில் பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சில காலங்களுக்கு முன்னர் ரீமேக் செய்யப்பட்ட காஞ்சனா, ராட்சசன் போன்ற திரைப்படங்களின் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம். 






 


நரேன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் ?


போலா என பெயரிடப்பட்டுள்ள இந்த கைதியின் இந்தி ரீமேக் படத்தில் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. கைதி படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த மற்றுமொரு பிரபலம் நடிகர் நரேன். போலீஸ் அதிகாரியாக அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்தியில் உருவாகி வரும் போலா படத்தில் நடிகர் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை தபு நடித்துள்ளதாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர் படக்குழுவினர். போலா படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி வரவேற்பை பெற்றது.