Tamannaah Net Worth : காதலரை விட 6 மடங்கு அதிகம்.. தமன்னாவின் சொத்து மதிப்பு தெரியுமா?

Tamannaah : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி அவரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

Continues below advertisement

திரைப்பட துறையில் மிகவும் முக்கியமான ஒரு இடத்தை தனது வசீகரமான அழகாலும் , திறமையான நடிப்பாலும் பிடித்தவர் நடிகை தமன்னா . தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வரும் இவர் தமிழ் சினிமாவில் 'கேடி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர். தன்னுடைய 17-வது வயதில் திரைத்துறையில் நுழைந்தவர் இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

Continues below advertisement

முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாகவும் நடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.  திரைப்படங்களில் நடித்து வந்தாலும் வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் ஏராளமான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். 

கோடியில் சம்பளம் :

படம் ஒன்றில் நடிக்க சம்பளமாக 4 முதல் 5 கோடி வரை பெறுகிறார் என கூறப்படுகிறது. ஃபாண்டா, சந்திரிகா, செல்கான் மொபைல்ஸ், சரவணா ஸ்டோர்ஸ்  உள்ளிட்ட பல பிராண்ட்களின் விளம்பரங்களிலும் நடித்து வரும் தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட 60 லட்சம் வரை பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவின் நிகழ்ச்சியில் 10 நிமிடத்திற்கு 50 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

நடிகை தமன்னாவுக்கு 80700 சதுர அடி பரப்பளவில், ரூ.16.6 கோடி மதிப்பிலான ஆடம்பரமான பங்களா ஒன்று மும்பையில் உள்ள ஜூஹூவில் உள்ளது. அங்கு தான் அவர் வசித்து வருவதாகவும் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 320i, மெர்சிடிஸ் - பென்ஸ் GLE மற்றும் மிட்சுபிஷி பஜெரோ போன்ற ஸ்வாங்கி கார்களையும் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.   


ஒட்டுமொத்த சொத்து மதிப்பு :

நடிகர் ராம் சரண் மனைவியும், தமன்னாவின் நெருங்கிய தோழியுமான உபாசனா கொனிடேலா, தமன்னாவுக்கு 2 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசளித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ. 120 கோடி இருக்கும் என்றும் அவர் தென்னிந்திய நடிகைகளை ஒப்பிடுகையில் பணக்கார நடிகைகளில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. 

தமன்னாவின் காதலர் விஜய் வர்மா :

நடிகை தமன்னா - நடிகர் விஜய் வர்மா இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் சமீபத்தில் தான் அவர்களின் உறவை தமன்னா உறுதிப்படுத்தினார். நெட்ஃப்ளிக்ஸின்  ஆன்டாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 செட்களில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு டேட்டிங் வரை சென்றது என்பதை அவரே தெரிவித்து இருந்தார். விஜய் வர்மாவின் சொத்து மதிப்பு 20 கோடி என்றும் அதை விட ஆறு மடங்கு அதிகமான சொத்து மதிப்பை தமன்னா வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Continues below advertisement