2023 ஆம் ஆண்டில் ஷாருக்கானின் 3வது படமாக ‘டங்கி’ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 






கடந்த இரண்டு ஆண்டுகளாக பல படங்கள் தோல்வியால் தள்ளாடிய பாலிவுட் திரையுலகம் இந்தாண்டு மீளத் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். தொட்டதெல்லாம் ரூ.500க்கும் மேல் தான் வசூல் என்னும் நிலையில் இந்தாண்டில் பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படும் ஷாரூக்கான் புதிய சாதனைப் படைத்தார். அவரின் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு படங்களும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலை பெற்று மாபெரும் வரலாறு படைத்தது. 






இப்படியான நிலையில் ஷாரூக்கானின் 3வது படமாக “டங்கி” படம் இன்று வெளியாகியுள்ளது. முன்னாபாய் சீரிஸ், 3 இடியட்ஸ், பிகே மற்றும் சஞ்சு உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இவர்  முதல்முறையாக நடிகர் ஷாருக்கான் 'டங்கி' படத்தில் இணைந்தது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், பொமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 






எப்போதும் சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து படம் இயக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, இப்படத்தில் மற்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுவது தொடர்பான பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார்.





பஞ்சாப்பை பூர்வீகமாக  கொண்ட நடிகர் ஷாருக்கான் தனது நண்பர்களுடன் லண்டனில் செட்டிலாக விரும்பும் ஒரு நபராக நடிக்கிறார் என்பது டங்கி படத்தின் டீசர், ட்ரெய்லர் மூலம் அறிய முடிந்தது. 






இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள டங்கி படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.அவற்றில் சில இந்த செய்தி தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.