பாலிவுட் திரைப்படங்களில் நீண்ட நாட்களாக நடித்து வரும் சில நடிகைகளில் ஒருவர் தபு. இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


குறிப்பாக தமிழில் காதல் தேசம், சிநேகிதியே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தபு தேசிய விருது பெற்ற நடிகை ஆவார். 


போலா :



பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர் அஜய் தேவ்கன். பிரபல நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிகை தபு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் போலா. அஜய் தேவ்கன் நடிக்கும் இந்த ஆக்சன் திரைப்படத்தில் உயர் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகை தபு.  இந்த திரைப்படம் கார்த்தி நடிப்பில் வெளியான தமிழ் திரில்லர் திரைப்படமான கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். கைதி திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. போலா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நாயகன் அஜய் தேவ்கன் உடன் நடிக்கும் நடிகை தபு மிகவும் கடினமான சண்டை காட்சிகளிலும் நடிக்கிறாராம்.


நடிகை தபுவிற்கு விபத்து :




இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை தபுவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெறும் காயத்திலிருந்து நூலிழையில் தப்பித்துள்ளாராம் நடிகை தபு. அடர்ந்த காட்டுப் பகுதியில் ட்ரக் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ரௌடிகள் நடிகை தபுவை துரத்தும் சண்டைக் காட்சியின் போது,  துரத்தி வந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று தபு ஓட்டி வந்த ட்ரக்கின் மீது  மோதியுள்ளது. மோதியதில் கண்ணாடி உடைந்து தபுவின் மீது குத்தியுள்ளது. ட்ரக் மீது மோட்டார் சைக்கிள் மிகவும் வேகமாக மோதியதாகவும், அதனால் கண்ணாடி உடைந்து தபுவை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. உடைந்த கண்ணாடி துகள்கள் நடிகை தபுவின் வலது கண்ணின் மேல் பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. 


செட்டில் இருந்த மருத்துவ உதவி குழு, இது குறித்து கூறுகையில் தபுவிற்கு ஏற்பட்ட காயம் சிறிய காயம் தான்; அதனால் அவருக்கு தையல் எதுவும் போட தேவையில்லை என்று கூறியுள்ளனர். நடிகை தபு இந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை பிரேக் எடுத்துக் கொள்வதாக அஜய் தேவ்கன் படக்குழுவினரிடம் கூறியுள்ளார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண