பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளுக்காக கோலிவுட், மாலிவுட்,பாலிவுட் போன்றவற்றில் தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு.
தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் டாப்சி தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தேவையான பணம் சம்பாதித்து விட்டதும் ஓய்வு எடுத்து விடலாம் என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன். என் எண்ணங்கள் இப்போதும் நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையிலேயே நின்று விட்டது. ஆடம்பர வாழ்க்கை எனக்கு சுத்தமாக பிடிக்காது. இப்போதும் கூட ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் ஒன்றுக்கு பத்து முறை யோசிப்பேன். பேரம் பேசுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி செல்போன்களை புதிது புதிதாக வாங்குவது. கார்களை புதிதுபுதிதாக மாற்றுவது எனக்கு பழக்கம் இல்லை. நான் முதல் முறையாக சம்பாதித்து வாங்கிய கார் இப்போதும்கூட என்னிடமே இருக்கிறது" என்றார்.
கடந்த வாரம் டாப்சி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் "சபாஷ் மிது" திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில், இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் வாழ்கையை ஏற்று நடித்து வருகிறார். டீஸர் தொடங்கிய சில வினாடிகளில் நீல நிற ஜெர்சியில் மிதாலி என்று எழுதப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.இந்த படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்