இயக்குனர் அஜய் பால் இயக்கத்தில் நடிகை டாப்ஸி பண்ணு, குல்ஷன் தேவையா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ப்ளர்’. சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகை டாப்ஸி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் ப்ளர் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
கோலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி. இதனையடுத்து ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம் , வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அதிகமாக வாய்ப்புகள் வந்ததும் அங்கு கவனம் செலுத்திய டாப்ஸி அங்கு படங்களில் நடித்து வருகிறார்.