Actress Swarnamalya: ​சிறிய வயதில் திருமணம், விவாகரத்து, மன அழுத்தம், தற்கொலை எண்ணன் என பல கஷ்டங்களை சந்தித்துள்ளதாக பிரபல நடிகை ஸ்வர்ணமால்யா தெரிவித்துள்ளார். 

 

சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த ஸ்வர்ணமால்யா, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். ஷாலினி, மாதவன் நடித்து ரசிகர்களின் எவர்கிரீன் படமான அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக ஸ்வர்ணமால்யா நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், எங்கள் அண்ணாவில் விஜயகாந்துக்கு தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தார். பின்னர், ஜோதிகா பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த மொழி படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்து அசத்தி இருப்பார். 

 

நடிப்பு மட்டும் இல்லாமல், தொகுப்பாளராகவும், கிளாசிக் நடன கலைஞராகவும் இருப்பவர் தான் ஸ்வர்ணமால்யா. 3வயதில் இருந்து நடனம் கற்று கொண்ட ஸ்வர்ணமால்யா, தனது 17வது வயதில் பரதத்திற்கான ’யுவ கலா பாராதி’ என்ற விருதையும் வென்று அசத்தியுள்ளார். 12வது படிக்கும் போது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்தார். பின்னர் திரைப்படங்களில் தோன்றிய இவர், 2002ம் ஆண்டு அர்ஜூன் ராம ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால் சில ஆண்டுகளிலேயே கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின்னர், தனியாக நாட்டிய பள்ளி தொடங்கி பரதநாட்டியம் கற்று கொடுத்து வருகிறார். 

 

இந்த நிலையில் யூடியூப் ஒன்றில் பேசிய ஸ்வர்ணமால்யா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், “ 21 வயதிலேயே திருமணம் நடந்து விவாகரத்து பெற்றோர். விவாகரத்துக்கான காரணம் என்ன என்று கூட எனக்கு தெரியவில்லை. எனக்கு 21 வயது, அவருக்கு 25 வயது. எது சரி, தவறு என்று தெரிந்து கொள்ளும் பக்குவம் எங்களிடம் இல்லை. அமெரிக்காவின் வாழ்க்கை முறையும் எனக்கு பிடிக்கவில்லை. விவாகரத்துக்கு அதிகமாக மன அழுத்தம் ஏற்பட்டது. சில நேரம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. என் தங்கையால் மனநல மருத்துவரை அணுகி 2 மாதங்களுக்கு மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்து கொண்டேன். அதன் பின்னர் தான் என்னை மாற்றிக் கொண்டேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். 

 

திரையில் மகிழ்ச்சியாக நடிக்கும் நடிகையாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகள் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.