ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகை சன்னி லியோன் சென்னை வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கணவர், மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது வழக்கம். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 






தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த அவர், தற்போது முழு நேர கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார். VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ  தயாரிப்பில் ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓ மை கோஸ்ட். ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தில் தான் சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 






முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இந்தப்படத்தின் டீசரும்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் காமெடி படமாக உருவாகி வரும் ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழா இன்று மாலை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நடிகை சன்னி லியோன் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் சன்னிலியோனை காண ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.