உங்களை யாரும் கிண்டல் செய்தால் எதையும் கண்டுக் கொள்ளாதீர்கள் என தனது ரசிகர்களுக்கு நடிகை சன்னி லியோன் அறிவுரை வழங்கியுள்ளார்.
சன்னி லியோன்:
கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் இன்று இந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான சன்னிலியோன் பாலிவுட்டில் நுழைந்த பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். பின்னர், அவருக்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சன்னி லியோன் தற்போது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் சன்னிலியோன் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அசத்தினார்.
ரத்தக்காயத்துடன் சன்னி:
சமீபத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றின் படப்பிடிப்பில் நடித்த சன்னி லியோனுக்கு காலில் அடிபட்டு ரத்தம் வெளியேறியது. சன்னி லியோன் தான் அது என அடையாளம் தெரியாத அளவுக்கு மேக்கப் போட்டிருக்கும் அவருக்கு அடிபட்டவுடன் அவரது குழுவினர் காயத்தை சரி செய்ய முயற்சித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இதனிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சன்னி லியோனிடம், அவரது பேச்சை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட தர்ணா துர்காவின் செயல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ”நான் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரின் பேச்சுகளையும் மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். யாராவது உங்களைப் பற்றி நன்றாகப் பேசினாலும் அல்லது உங்களைப் பற்றி கேலி செய்தாலும் அல்லது உங்களைப் பாராட்டினாலும், அவர்கள் உங்களைப் பற்றி பேசும் வரை, அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி எதையும் கண்டுக் கொள்ளாதீர்கள்” என கூறியுள்ளார்.
கிண்டல்:
மேலும், “மக்கள் என்னை விரும்புவதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் சினிமா தொழிலில் நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளேன். அதை அப்படியே தக்கவைக்க திட்டமிட்டுள்ளேன். யாராவது என்னை கிண்டல் செய்தால், அந்த அளவுக்கு நான் உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைக் கொள்கிறேன். அதேசமயம் என்னை கிண்டல் செய்தவர்களை நான் தேடவில்லை. ஆனால் கிண்டல் செய்யும் பதிவுகளை பார்த்து சிரிப்பேன்” எனவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். திரையுலகைப் பொறுத்தவரை சன்னி லியோன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் அவர்களின் பேச்சு உச்சரிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.