Sunaina: சுனைனாவின் வருங்கால கணவருக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள்! முன்னாள் மனைவி பற்றி தெரியுமா?

Actress Sunaina - Khalid Al Ameri: நடிகர் சுனைனா பிரபல யூடியுபர் கலித் அல் அமேரி ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது

Continues below advertisement

சுனைனா

சன் பிக்சர்ஸ் தயாரித்த காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா (Actress Sunaina). மாசிலாமணி , நீர்ப்பறவை , சில்லுக்கருப்பட்டி ஆகியவை இவர் நடிப்பில் வெளியான குறிப்பிடத் தகுந்த படங்கள். சுனைனா பிரபல யூடியூபர் கலித் அல் அமேரி என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. முன்னதாக சுனைனா தனக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதே புகைப்படத்தை கலித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

யார் இந்த கலித் அல் அமேரி

துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி (Khalid Al Ameri) தனது பெயரில் ஒரு பிரபல யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.  சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது. இவருக்கு ஏற்கனவே சலாமா முகமத் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கலித் மற்றும் சலாமா தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள். இன்ஸ்டாகிராமில் வைரலாக அறியப்பட்ட ஜோடிகளில் இந்த ஜோடியும் ஒன்று . தனிப்பட்ட காரணங்களால் சலாமா மற்றும் கலித் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். தனது மனைவியுடனான எல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கலித் நீக்கியுள்ளார். ஆனால் சலாமா இன்னும் தனது முன்னாள் கணவருடன் ஒரு சில புகைப்படங்களை வைத்துள்ளார். 

சுனைனா மற்றும் கலித் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவல் வெளியானது முதல் கலித்தின் முன்னாள் மனைவி சலாமா குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்றும் ஒரு சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் தனது விவாகரத்தை உறுதிப்படுத்தியுள்ளார் சலாமா முகமது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola