நடிகை ஸ்ருதிஹாசன் அன்மையில் தனது தந்தை கமலஹாசன் மற்றும் தாய் சரிகா இடையே ஏற்பட்ட விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார். கமலஹாசன்-சரிகா தம்பதியினருக்கு 1988-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆனபோது, கமலும் சரிகாவும் பிரிவதாக முடிவெடுத்து விவாகரத்து செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் பிறந்த 2-வது மகள் தான் அக்ஷராஹாசன்.
இந்த விவாகரத்து சம்பவம் தற்போது பேசியுள்ள ஸ்ருதிஹாசன், கமலஹாசனும் சரிகாவும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் இரண்டு நபர்களுக்கு ஒத்துப்போகவில்லை என்ற சூழல் வந்தபின்பு இருவரும் இணைந்து வாழ்வது என்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் கூறுகையில் "அவர்கள் இருவரும் தங்களது வாழ்வை தனித்தனியாக வாழ நினைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன், பிரிந்த போதிலும் சிறந்த பெற்றோர்களாக அவர்கள் இருந்தனர். தனிப்பட்ட முறையில் எனக்கு என் தந்தை மிகவும் நெருக்கமானவர், ஆனால் தாய் சரிகாவும் எங்கள் வாழ்வின் ஒரு பகுதிதான். இந்த விவாகரத்து நல்லதற்காக நடந்ததாகவே நினைக்கிறன்" என்கிறார். மேலும் "கமல், சரிகா இருவருமே தனித்தன்மை நிறைந்த அழகான மனிதர்கள். ஆனால் இருவரும் சேர்ந்து அழகாக இருக்கமுடியாது என்ற சூழல் வந்ததும் பிரிந்துவிட்டனர். சேர்ந்து வாழ்வதை விட, அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதில் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்" எனவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.