தென்னிந்திய சினிமாவை அலங்கரித்த நடிகைகளில் ஒருவரான சௌந்தர்யாவின் நினைவுகளை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து விட முடியாது. காதலா காதலா, பொன்னுமணி, அருணாச்சலம், தவசி என ஏராளமான படங்களில் தனது வசீகரமான தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். 


 


Soundarya last wish :சௌந்தர்யாவின் கடைசி ஆசை... கோர விபத்தில் உயிரிழந்த நடிகையின் விருப்பம் இதுவா... வெளிவந்த அதிர்ச்சி தகவல் 



தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக இன்றும் கருதப்படும் சௌந்தர்யா பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். அமிதாப் பச்சன் ஜோடியாக சூரியவன்ஷம் படத்தில் அவரின் நடிப்பு இன்றும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பசுமையாகவே உள்ளது. எந்த நடிகருடன் நடித்தாலும் அவர்களுடன் சௌந்திரயாவிற்கு இருக்கும் கெமிஸ்ட்ரி திரையில் அற்புதமாக இருக்கும். அத்தனை நேர்த்தியான ஒரு நடிகை. 



தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா 2004ம் ஆண்டு பா.ஜ.க கட்சியில் இணைந்தார். எம்.பி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற போது பெங்களூரு அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த சௌந்தர்யா உடல் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து போனது. அந்த விபத்தில் அவருடன் சென்ற சௌந்தர்யாவின் அண்ணன் அமர்நாத்தும் உயிரிழந்தார். சௌந்தர்யா விபத்தில் இறந்த போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது அனைவரையும் உலுக்கியது.


 



சௌந்தர்யா விபத்தில் சிக்குவதற்கு முன்னர் அவர் அண்ணியிடம் கடைசியாக சொன்ன விஷயம் அவரின் ரசிகர்களை நிலைகுலைய செய்துள்ளது. அவர் வீட்டில் இருந்து கிளப்புவதற்கு முன்னர் தனது அண்ணியிடம் இரண்டு விஷயங்களை விருப்பமாக கேட்டுள்ளார். பிரச்சாரத்திற்கு செல்வதால் காட்டன் புடவையில் சென்றால் நன்றாக இருக்கும் என்பதற்காக தன்னிடம் காட்டன் புடவை இல்லாததால் அண்ணியிடம் இருந்து சில புடவைகளை பெற்று சென்றுள்ளார். அதே போல கிளம்பி வீட்டுக்கு வெளியே சென்ற பிறகு மீண்டும் உள்ளே வந்து அண்ணியிடம் குங்குமம் வேண்டும் என வைத்து கொண்டு சென்றுள்ளார். அது தான் அவர்கள் சௌந்தர்யாவை கடைசியாக பார்க்கும் தருணம் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. இப்படி ஒரு ஆசை சௌந்தர்யாவின் கடைசி ஆசையாக இருக்கும் என யாராலும் நினைத்து கூட பார்க்கமுடியாது. இப்படி ஒரு சோகமான முடிவு சௌந்தர்யாவின் ரசிகர்களை பெரிதும் பாதித்தது. 


சிறப்பான நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார் சௌந்தர்யா. 2002 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான த்வீபாவு திரைப்படத்தை இயக்கியதோடு அதில் நடித்தும் இருந்தார் சௌந்தர்யா. அவர் இந்த மண்ணில் இல்லாவிட்டாலும் அவரின் படங்கள் மூலம் நினைவுகள் மூலம் என்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.