மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரிவேளூர் என்னும் கிராமத்தில் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத சுயம்புநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு இந்த ஊரில் தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்ததால், ஹரிவாசநல்லூர் என்னும் புராதான பெயரை பெற்றுள்ளது. அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி அரிவேளூர் என்று அழைக்கப்படுகிறது.




இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலயம், 85 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு முழுமையாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,  மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் 27 -ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.  


Shamlee Shalini: குட்டி அஞ்சலியாக நடித்தவர்.. இன்று எவ்வளவு பெரிய கலைஞராக மாறிவிட்டார்.. ஷாலினியின் தங்கை ஷாம்லியின் ஓவியக் கண்காட்சி




இந்நிலையில், இன்று காலை நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்தனர். பின்னர், விமான கும்பத்தை அடைந்து, அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Women's Commision Chairman: மாணவிகள் வாட்ஸ்-அப் DP புகைப்படம் வைக்கக்கூடாது.. மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேச்சு


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.