போதைப்பொருள் விவகாரத்தில் மாடலும், கன்னட நடிகையுமான சோனியா அகர்வாலை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், ஊடகங்கள் சில 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற படங்களில் நடித்த தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை பயன்படுத்தி செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தன்மீது அவதூறு பரப்பிய தமிழ் ஊடகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதில், “எனக்கும், என் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் தரும் அளவிற்கு அடுத்தடுத்து போன் அழைப்புகள், மெசேஜ்கள் வர காரணமான மீடியா, ஊடகவியலாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.






இந்தியா முழுவதும்  போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை போலீசாரும், போதை தடுப்புப் பிரிவு காவலர்களும் தீவிரமாக எடுத்து வருகின்றனர். பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இதில் சிக்கி வருகின்றனர். இந்தி, கன்னடம் என சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் விசாரணைக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமாத்துறையினர் மட்டுமின்றி தொழிலதிபர்களும் இதில் சிக்கியுள்ளனர்.  இந்நிலையில் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மாடலும், நடிகையுமான சோனியா அகர்வாலை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர் அவரோடு சேர்த்து டிஜே வஜன் சின்னப்பா, தொழிலதிபர் பாரத் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 



வீட்டில் இருந்த பெண் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காணாமல் போன பெண் நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த விவகாரத்தை நூல் பிடித்துச் சென்ற போலீசார், தாமஸ் என்பவரை ஆகஸ்ட் 12ம் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் குறித்தும், அதில் நடிகை சோனியா அகர்வால், வஜன் சின்னப்பா, தொழிலதிபர் பாரத் குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையிலேயே மூன்று பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது விவகாரம் கன்னட சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் குறித்தும், அதில் நடிகை சோனியா அகர்வால், வஜன் சின்னப்பா, தொழிலதிபர் பாரத் குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையிலேயே மூன்று பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது விவகாரம் கன்னட சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.