நடிகை சோனா :


தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி , காமெடி , குணச்சித்திர நடிகை என வலம் வந்தவர் நடிகை சோனா.  சினிமாவில் நடித்து வந்த சோனா தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்னும் சீரியலில் நடித்து வருகிறார். திருமணமாகி செட்டில் ஆனவர் சில காலங்களுக்கு  சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறி தனியாக வாழ்ந்து வருகிறார்.




தனிமை கற்றுக்கொடுக்கும் :


சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நாடக உலகம் சிறப்பான வரவேற்பையும் அங்கீகாரத்தையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். கவர்ச்சி நடிகை என தனக்கு இருந்த அடையாளத்தை  மாற்ற சீரியல் பெரிதும் உதவியாக இருக்கிறது என்னும் சோனா , தனிமையில் வாழ்ந்து வருவது குறித்து மனம் திறந்திருக்கிறார். தனிமையில் இருப்பதுதான் எனக்கு வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொடுத்தது.  எனக்கென யாராவது இருந்திருந்தால் நான் அவர்களிடம் முடிவெடுக்கவோ, அல்லது ஆலோசனை கேட்கவோ செய்திருப்பேன். ஆனால் நான் தனியாக இருப்பதால் எல்லாத்தையும் அனுபவமாக , பாடமாக எடுத்துக்கொண்டு நானே எல்லாம் செய்கிறேன். தனிமை நிறைய கற்றுக்கொடுக்கும் என்றார்.


 






 


நடிகை சோனா சீரியல்களில் மட்டுமல்லாம திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனது திறமையை வெளிப்படுத்த சீரியல் உதவியாக இருக்கும் என்கிரார் சோனா. நடிப்பை தவிர அவர் பேஷன் ஆடைகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் பெயர் UNIQ.