”பிரசாந்த் ஒரு குழந்தை மாதிரி; அவருக்கு சிறந்த ஜோடி இவர்தான்“ - நடிகை சினேகா ஓபன்!

”பிரசாந்த் ஒரு பன்முக திறமை கொண்ட மனிதர். எதைப்பற்றி கேட்டாலும் பதில் சொல்லுவார். சூரியன் , ஏர்கிராஃப்ட் , மேக்கப் அப்படினு எதை பற்றி கேட்டாலும் அறிவுப்பூர்வமாக பேசுவார்.”

Continues below advertisement

நடிகர் பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்தகன் என்னும் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார். அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் தியாகராஜன் மற்றும் பிரசாந்த் இருவரும் ஈடுபட்டு வரும் நிலையில் , அப்படியான நிகழ்வில் கலந்துக்கொண்ட நடிகை சினேகா. தனக்கு பிரசாந்திற்கும் இருக்கும் நட்பு குறித்தும் , பிரசாந்தின் கேரக்டர் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். 

Continues below advertisement

 


அதில் ”என்னுடைய முதல் ஹீரோ பிரசாந்த்தான். இவர் என்னை முதல் படத்துல எவ்வளவு கலாய்க்க முடியுமோ அவ்வளவு கலாய்ச்சுட்டாரு. அதன் பிறகு யாரு என்னை கலாய்த்தாலும் ஜாலியாகத்தான் இருந்தது. அவரை முதல் முதலாக பார்க்கும் பொழுது பிகப்பெரிய ஸ்டார். ஆனால் அவர் கூட நடிக்க எந்தவொரு தயக்கமும் இல்லை. ரொம்ப ஜாலியா பேச ஆரமிச்சுட்டாரு. நாங்க தினமும் பேசக்கூடியவர்கள் கிடையாது. ஆனால் எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போதெல்லாம் எங்களுடைய ஃபிரண்ட்ஷிப் கிளிக் ஆகிடும். பிரசாந்த் ஒரு பன்முக திறமை கொண்ட மனிதர். எதைப்பற்றி கேட்டாலும் பதில் சொல்லுவார். சூரியன் , ஏர்கிராஃப்ட் , மேக்கப் அப்படினு எதை பற்றி கேட்டாலும் அறிவுப்பூர்வமாக பேசுவார். அதனால தான்தான்  என அகந்தையும் இருந்தது கிடையாது அதுதான் பிரசாந்திடம் எனக்கு ரொம்ப பிடித்தது. முதல் படத்துல நடிக்க போனப்போ பெரிய ஹீரோவோட நடிக்க போறோமேனு எனக்கு கை-கால் எல்லாம் நடுங்கியது. ஆனால் அவர் அவ்வளவு கம்ஃபர்ட்டா வச்சிருந்தாரு. பிரசாந்த் மனசு நிஜமாவே குழந்தை மாதிரித்தான். எல்லோரையும் சிரிக்க வச்சுட்டே இருப்பாரு. பிரசாந்த் வந்தாலே செட் ரொம்ப கல கலனு இருக்கும். யாரை பற்றியும் பேசமாட்டாரு.. பிரசாந்த் மேல எனக்கு நிறைய அன்பும் மரியாதையும் இருக்கு. பிரசாந்துடன் நடித்தவர்களில் எனக்கு பிடித்த ஜோடி சிம்ரன்தான். இருவரும் இணைந்து நிறைய படங்கள் பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுமட்டுமல்ல ஐஸ்வர்யா ராய் , ஜீன்ஸ் படத்துல அவ்வளவு அழகா இருப்பாங்க. அதுல அவங்களுக்கு பொருத்தமான ஹீரோனா நான் பிரசாந்த் -தான் . “என தெரிவித்துள்ளார் சிநேகா.

Continues below advertisement
Sponsored Links by Taboola