Shruti Hassan Birthday: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாடகியாக, நடிகையாக பன்முகத் தன்மையை வெளிப்படுத்திய நடிகை ஸ்ருதி ஹாசன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.


ஸ்ருதி ஹாசன்




உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தாகூர் ஆகிய இருவருக்கும் மகளாக பிறந்தவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் .  தனது மழலைக் குரலால் தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பொன்னே பாடலை பாடினார். தமிழில் மாதவன் நடிக்க இருந்த என்றென்றும் புன்னகை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருந்தார் ஸ்ருதி ஹாசன் ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த முயற்சி நடைபெறாமல் போனது . இதைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு இம்ரான் கானுடன் லக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.


தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசனுக்கு யாரும் எதிர்பாராத வகையில் பெரிய வரவேற்பு கிடைத்தது.  தனுஷ் நடித்த 3 , ஸ்ரீதர், என அடுத்தடுத்தப் படங்களில்  நடித்தார். 


விமர்சனங்கள்




கமர்ஷியல் படங்கள் நடிகைகளுக்கு நடிப்பை விட கிளாமரை மட்டுமே முதன்மையான தகுதியாக வைக்கின்றன. எப்போது ஏதாவது புதிதாக செய்யும் ஒரு முயற்சி ஸ்ருதி ஹாசனிடம் இருந்து வந்துள்ளதை நாம் பார்க்கலாம். ஆனால் கமர்ஷியல் சினிமா அவரிடம் எந்த விதமான திறமையையும் எதிர்பார்க்கவில்லை. தமிழ் , தெலுங்கு என அடுத்தடுத்தப் படங்களில் வரிசையாக நடித்த ஸ்ருதி ஹாசன் ஒரு கட்டத்திற்கு மேல் தொடர் விமர்சனங்களை சந்திக்கத் துவங்கினார். அவரது நடிப்பு எந்த வித சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தாமல் போனது. இதனைத் தொடர்ந்து சில காலம் நடிப்பில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டார். 


ஒரு நடிகரை விட ஒரு பாடகராக ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். வாரணம் ஆயிரம் படத்தில் அவர் பாடிய அடியே கொள்ளுதே பாடல் , கண்ணழகா பாடல்கள் இன்றும் வரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக உள்ளன. மேலும் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கும் இசையும் அமைத்துள்ளார். 


இதனிடையே சிலகாலம் இடைவெளிக்குப் பின் மீண்டும் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய லாபம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார் ஸ்ருதி ஹாசன் . அந்த சமயத்தில் பரத்வாஜ் ரங்கனுடைய அவரது நேர்காணலில் அவரது பேச்சு தெளிவான ஒரு மனநிலையை  வெளிப்படுத்து விதமாக அமைந்தது. சமீபத்தில் பிரபாஸ் நடித்த சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். மேலும் அவர் எழுதி இசையமைத்த பாடல் ஒன்றும் வெளியானது. 


 சினிமாவில் வெற்றித் தோல்விகளைக் கடந்து தனது திறமைகளுக்கு ஏற்றதான ஒரு வழியைத் தேர்வு செய்யும் ஒரு நபராகவே  ஸ்ருதி ஹாசன் இருந்துள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.