சிம்ரன்
90களின் இறுதி மற்றும் 2000மாவது ஆண்டில் தமிழக இளைஞர்கள் பலரையும் தனது நடனத்தாலும் புன்னகையாலும் கவர்ந்து இழுத்தவர் நடிகை சிம்ரன். முன்னணி ஸ்டார்ஸுடன் நடித்த சிம்ரன் பல வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியான சமயத்தில் சிம்ரன் அளித்த பேட்டி ஒன்றில் ஆரம்ப நாட்களில் தான் கிளாமராக நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார்.
இதுதான் கிளாமர்..
"என் குடும்பம் இல்லைனா நான் இல்லை. அவங்கதான் எனக்கு எல்லாவுமா இருந்தாங்க. என் அம்மா அப்பா நடிக்கனும்னு சொல்லும் பொழுது தடையாகவெல்லாம் இல்லை. எங்களோட கெரியருக்கு மதிப்பு கொடுத்தாங்க. அவங்களை நான் எப்போதுமே ரொம்ப நேசிக்குறேன். அதே போல அன்பும் வச்சுருக்கேன். எனக்கு நடனம் பிடிக்குமா நடிப்பு பிடிக்குமானு கேட்டா...நான் நடிப்புதான் சொல்லுவேன். அதிகமாக நடிக்க ஸ்கோப் இருக்கும் படங்கள் எனக்கு பிடிக்கும். கிளாமர் என்பது நடிக்க வந்த முதல் இரண்டு வருடங்களில் பண்ணினா ஓக்கே. ஆனால் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டுமானால் பர்ஃபாமன்ஸ்தானே முக்கியம்.
நான் எப்போதும் கிளாமரை விட வேண்டும் நினைத்தது இல்லை. கிளாமர் என்பது அதீத கவர்ச்சி என்பதல்ல. நீங்க உங்க குடும்பத்தோட அமர்ந்து பார்ப்பது போல இருக்கனும். கிளாமர் க்யூட்டா இருக்கும் . அதீத கவர்ச்சி வல்கரா இருக்கும். நான் நடிக்க வந்த சமயத்தில் கிளாமராக உடை அணிந்திருக்கிறேன். ஏன்னா சினிமா துறையினர் உங்களை அந்த மாதிரியான ஆடைகள் அணிய கட்டாயப்படுத்துவாங்க. ரசிகர்களும் அதைத்தான் விரும்புவாங்க. அதெல்லாம் கெரியரின் ஆரம்ப நாட்களில் மட்டும்தான். கொஞ்சம் கொஞ்சமா நான் பர்ஃபாமென்ஸுக்குள்ள வந்துட்டேன். கண் எதிரே தோன்றினால் , துள்ளாத மனமும் துள்ளும் நல்ல வாய்ப்பு கொடுத்தது. நான் நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்துல நிறைய கஷ்டப்பட்டேன். அது என்னால மறக்க முடியாது. எப்போதுமே போராட்டங்கள்தான் நமக்கு வாழ்க்கையுடைய அருமையை உணர்த்தும். “ என்றார் சிம்ரன்