சிம்ரன் தமிழ் சினிமாவில் வடநாட்டு இறக்குமதி நடிகைகளில் கோலோச்சியவர். சிம்ரன் அழகுப்பதுமையாக அறிமுகமானாலும் கூட குறுகிய காலத்திலேயே வெர்சடைல் நடிகையாக தடம் பதித்தார். ஒருகாலத்தில் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்த பெயர் தான் சிம்ரன். சில வருடங்களுக்கு முன்னால் ரஜினியுடன் அவர் பேட்டையில் நடித்தபோது கூட அழகும், ஸ்டைலும் குறையாமல் இருந்தார்.


ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், அஜித், விஜய், சூர்யா, பிரபுதேவா, அப்பாஸ், சரத்குமார், முரளி என சிம்ரன் ஜோடிகட்டி நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம்.


நடிகை சிம்ரன் தான் வளர்ந்து வந்த காலத்தில் அளித்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் அழகாக துள்ளலாக பதில் அளித்துள்ளார்.


அதன் தொகுப்பு:


என் பெயருக்கு அர்த்தம் என்னவென நிறைய பேர் கேட்கிறார்கள். சிம்ரன் என்பதுதான் அதன் அர்த்தம். சிம்ரன் என்றால் தியானம் என்று அர்த்தம். இந்தப் பெயர் வட நாட்டில் ரொம்பவே பிரபலம். இங்கு இது கொஞ்சம் புதுசாக இருக்கிறது.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் கல்லூரியில் படித்தேன். அப்போதிருந்தே நடிப்பின் மீது ஆசை இருந்தது. ஒருமுறை எனக்கு ஜெயா பச்சனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் தேரே மேரே சப்னே படம் கிடைத்தது. அதன் பின்னரே நான் தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன்.


என் வீட்டில் என் அப்பா, அம்மா, ரெண்டு தங்கச்சி, தம்பி உள்ளனர். என் தங்கைகள் மீது எனக்கு அலாதி பிரியம். எனக்கு இப்போது வயது 21 ஆகிறது. என் வயதை மறைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. வயது எனது இமேஜை பாதிக்காது என நினைக்கிறேன். ஒரு நல்ல படத்திற்கு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும். புதிய முகங்களும் நல்ல இயக்குநர்களாக இருக்கிறார்கள். அதுபோல் நன்றாக செலவழிக்கும் தயாரிப்பாளரும் இருக்க வேண்டும். நான் வதந்திகளை எப்போதும் ஊக்குவிக்க மாட்டேன். எனக்கும் ரம்பாவுக்கும் சண்டை, அப்பாஸுக்கும் எனக்கும் காதல் என்பதெல்லாம் புரளி.
சினிமாவில் வருவதுபோல் கண்டதும் காதல் வருமா எனத் தெரியாது. ஒருநபரை பார்த்து அவருடைய நடவடிக்கைகள் பிடித்திருந்தால் நான் காதலிப்பேன்.




அப்புறம் ஒரு படத்திற்கு கதைதான் முக்கியம். அதனால் டபுள் ஹீரோயின் ரோல் பண்ணால் இமேஜ் போய்விடும் என்பதில்லை. சினிமாவுக்கு அப்புறம். நான் திருமணம் செய்து கொண்டு. நல்ல குடும்பத்தலைவியாக. நல்ல மனிதியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு டென்ஷன் இல்லாத ஹேப்பி லைஃப் தான் வேண்டும்.


சிம்ரன் இந்தப் பேட்டியை முடிக்கும் போது மின்னல் ஒரு கோடி என்ற பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்து முடித்திருப்பார்.