Shraddha Kapoor: காய்ச்சல் படுத்தி எடுக்குதா? இத குடிங்க.. ஷ்ரத்தா கபூர் கொடுத்த சூப்பர் டிப்ஸ்!

ஃப்ளூ காய்ச்சலில் இருப்பவர்கள் 'கதா' குடித்து குணம்பெற்று தன் ‘தூ ஜூத்தி மெய்ன் மக்கர்’ படத்தைப் பார்த்து ஆதரவு தெரிவிக்கும்படி ஷ்ரத்தா பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

நடிகைகள் பெரும்பாலும் ஒர்க் அவுட், டயட் என ஸ்ட்ரிக்ட்டாக வலம் வரும் நிலையில், இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னை உணவுக்காதலியாக அடையாளப்படுத்திக் கொண்டு Foodie ஆக வலம் வருபவர் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்.

Continues below advertisement

குஜராத்தி உணவுகள் தொடங்கி ஆரோக்கியமான சாலட்கள் வரை தான் சாப்பிடும் உணவுகளின் வீடியோக்களை ஷ்ரத்தா கபூர் தொடந்து பகிர்ந்து வருகிறார்.

இணையத்தில் 79 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ஷ்ரத்தா, தொடர்ந்து தன் உணவு வீடியோக்களையும் ரெசிப்ப்பிக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நல்ல உடல்நிலையிலும் சரி, உடல் நலன் சரியில்லாத நாள்களிலும் சரி அதற்கேற்றபடி தான் உண்ணும் உணவுகளை ஷ்ரத்தா பகிர்ந்துக் கொள்ளத் தவறியதேயில்லை. 

அந்த வகையில் தற்போது ஃப்ளூ காய்ச்சலால் உடல் நலன் குன்றி முழு ஓய்வில் உள்ள ஷ்ரத்தா, இந்த நேரத்தில் தான் என்ன உணவு உட்கொள்கிறேன் என்பது குறித்துப் பகிர்ந்துள்ளார். அதன்படி தான் 'கதா' எனும் மூலிகை டீ  குடிக்கும் புகைப்படத்தை ஷ்ரத்தா பகிர்ந்துள்ளார்.

காதா என்பது மசாலா மற்றும் மூலிகைகளால் வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையாகும். இது பொதுவாக சளி, இருமல், காய்ச்சலை விரட்ட உதவுகிறது. இந்நிலையில் ஃப்ளூ காய்ச்சலில் இருப்பவர்கள் 'கதா' குடித்து குணம் பெற்று தன் ‘தூ ஜூத்தி மெய்ன் மக்கர்’ படத்தைப் பார்த்து ஆதரவு தெரிவிக்கும்படி ஷ்ரத்தா பதிவிட்டுள்ளார்.


ஸ்ட்ரீட் உணவு வகைகளான பானீ பூரி, சேவ் பூரி, பேல் பூரி ஆகியவற்றின் பெரும் ரசிகையான ஷ்ரத்தா அடிக்கடி தான் கொறிக்கும் ஸ்ட்ரீட் உணவுகளின் புகைப்படங்களைப் பதிவிட்டும் லைக்ஸ் அள்ளி வருகிறார். ஷ்ரத்தாவின் இன்ஸ்டா ரீல்ஸிலும் அடிக்கடி அவர் உண்ணும் உணவு வகைகளே முக்கிய இடம்பெறுகின்றன.

நடிகர் ரன்பீர் கபூருடன் ஷ்ரத்தா நடித்துள்ள ‘தூ ஜூத்தி மெய்ன் மக்கர்’ படம் இந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது,

மேலும் படிக்க: Archana Gautam: பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... சிக்கும் பிரியங்கா காந்தியின் உதவியாளர்...பாலிவுட்டில் பரபரப்பு

Continues below advertisement
Sponsored Links by Taboola