Actress Shobha: மகனைப் பற்றி பேசி கேட்டிருப்பீங்க... மகளை பற்றி விஜய் அம்மா சொல்வதை கேளுங்க!

விஜயின் அம்மாவான நடிகை ஷோபா தனது மகள் வித்யா பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

Continues below advertisement

விஜயின் அம்மாவான நடிகை ஷோபா தனது மகள் வித்யா பற்றி உருக்கமாக பேசியுள்ளார். 

Continues below advertisement

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ. சந்திரசேகர் மனைவியும் மற்றும் விஜயின் தாயுமான ஷோபா சந்திரசேகர் இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மகன் விஜய் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ள ஷோபா, தனது மகள் மீது அதிக பாசம் வைத்திருந்தார். ஆனால் சிறு வயதிலேயே மகள் இறந்துவிட்டார். பேட்டிகள் பலவற்றில் மகன் விஜய் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கும் ஷோபா, மகள் பற்றிய நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.

அந்தப்பேட்டி கீழே

நடிகை ஷோபனா பேசும் போது, “ என்னுடைய மகளை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். மூன்றரை வயதில் இறந்து போன குழந்தையை இப்போது நினைக்கும் போது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றே தோன்றும். இந்த நிமிஷம் வரைக்கும் நான் மிஸ் செய்கிறேன். அவள் பிறந்த பிறகுதான் நாங்கள் மேலே வர ஆரம்பித்தோம். அவள்தான் எங்களின் அதிஷ்ட தேவதை. அவள் பெயர்  ‘வித்யா’. என்றார்.

 

தொடர்ந்து பேசிய சந்திரசேகர்  ‘ நானும் மிஸ் செய்து கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி நான் நினைக்கும் போதே என்னால் அதனை உணரமுடியும். சில வீடுகளில் பெண் குழந்தைகள் அப்பாவின் மீது அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அதைப்பார்க்கும் போது நானும் மிஸ் செய்வேன். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அவள் சென்று விட்டாள்.


அவளுக்கு ‘லுக்கிமியா’ என்ற நோய் இருந்தது. அவளுக்கு அந்த நோய் இருக்கிறது என்று தெரிந்த உடன்  அவளை எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் அழைத்துச் சென்றேன். அப்போது மெட்ராஸில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. மதியம் பிரேக்கில் வீட்டிற்கு வந்தேன். சாப்பிட்டு விட்டு  கிளம்பிய என்னை வித்யா போகாதீர்கள் என்றார். எப்போதும் அப்படி சொல்லமாட்டாள். என்னோட மடியிலேயே  அவள் உயிர் பிரிந்து விட்டது. அப்போது விஜய்  ‘வித்யா’ என்று கத்தினான்." என்று பேசியிருக்கிறார். 

விஜய் நடித்து வரும் வாரிசு படம், ஒரு குடும்ப கதை என்று பேசப்படுகிறது.  ஆக்‌ஷன், சூப்பர் பாடல்கள் என ஒரு பக்காவான கமர்ஷியல் படத்திற்கு தேவையானவற்றை கொண்டு  இப்படம் உருவாகிவருகிறது. அதனால்  வாரிசு, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமையலாம்.

 

ராஷ்மிகா மந்தன ஹீரோயினாக நடிக்க பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, ஜெய சுதா, ஷாம், ஸ்ரீகாந்த் யோகி பாபு ஆகிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு முடிய வரும் பொங்கலுக்கு மாஸாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

 

Continues below advertisement
Sponsored Links by Taboola