சென்னையைச் சேர்ந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவருடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி. தமிழ் மற்றும் மலையாள படங்களில் சிவரஞ்சனியாக அறியப்பட்ட இவர், தெலுங்கு சினிமாவில் மட்டும் ஓகா என்று அறியப்பட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 


விக்ரம், ஆனந்த் பாபு, அரவிந்த் சாமி, நெப்போலியன், முரளி, விஜயகாந்த்,  என்று மாஸான நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவ்வளவு ஏன், பின்னணி பாடகர், எஸ்பி பாலசுப்பிரமணியம் படத்தில் கூட இவர் நடித்துள்ளர். பிஸியான நடிகையாகவே இருந்தார். முதல் திருமணம் தோல்வியில் முடியவே, இரண்டாவதாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிய சிவரஞ்சனி, தன்னுடைய மூன்று குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.  இந்த நிலையில் தான் சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனக்கு கண்ணால் தான் வாய்ப்பு கிடைத்ததாக கூறியிருக்கிறார். 


அதாவது இவருக்கு, 14 வயது இருக்கும் போது பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் கண்களை பார்த்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதற்கு என்னோட பெற்றோரும் ஒரு காரணம் தான். சினிமாவில் நடிக்க அவர்கள் தான் அனுமதி கொடுத்தனர். இல்லையென்றால் நான் நடித்திருக்கவே மாட்டேன். அப்படி நடிச்ச படம் தான் நிலா பெண்ணே. அதில் என்னோட உமா மகேஸ்வரி என்ற ஒரிஜினல் பெயரோடு தான் நடித்தேன்.


அதன் பிறகு நான் நடித்த மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில், தயாரிப்பாளர் என்னுடைய பெயரை சிவரஞ்சனி என்று மாற்றினார். உமா மகேஸ்வரி என்றால் யாருக்கும் தெரியாது. சிவரஞ்சனி என்றால் தான் இப்போது எல்லோருக்கும் தெரியும். மேலும் என் கணவர் ஷூட்டிங் போகும் பொழுதெல்லாம் , அவருடைய விஷயங்களில் தலையிடுவதே கிடையாது. நானும் வீட்டை விட்டு வெளியில் சென்றது கூட கிடையாது. வீடு குடும்பம் தான். அதோடு, அவர் என்ன படத்தில் நடிக்கிறார், ஷூட்டிங் எங்க எப்போது வருவார் என்று கூட நான் கேட்க மாட்டேன். எனக்கு தமிழ் தெரியும். என்னுடைய பசங்களும் தமிழ் நன்றாக பேசுவாங்க. ஆனால், என்னிடம் பேசும் போது தெலுங்கில் தான் பேசுவார்கள் என மிகவும் கலகலப்பாக பேசியுள்ளார்.