நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா. சமீபத்தில் அம்மன் வேடம் போட்டு இவர் நடத்திய போட்டோஷூட் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கவர்ச்சி நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வந்த ஷகிலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி  வேறொரு முகத்தை பெற்றுத்தந்தது. அதே போல அந்த ஷோவில் அவரது மகள் மிளாவும் ஒரே ஒரு எபிசோடில் வந்து புகழடைந்தார். அதன்மூலம் திருநங்கைகளின் மீதான பிம்பத்தையும் சாதாரண மக்களிடையே மாற்றியமைத்தது நிகழ்ச்சி. ஷகீலா, மிளாவை தத்தெடுத்து வளர்ப்பது 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சி மூலம் தான் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆடை வடிவமைப்பாளரான மிளா அதன் பின்னர் ஷகீலாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளிட்டார். பின்னர் பிரபலம் ஆனதால் மிளாவின் யூட்யூப் சேனல் ஹிட் ஆனது. மாடலிங் துறையில் நல்ல மார்க்கெட் உருவாக பிஸியானார்.


இப்படியாக பிஸியாக இருக்கும் மிளா, விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார். இந்த நிலையில், அம்மன் வேடத்தில் மேக்கப் போட்டு புதிய போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் மிளா. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


 






 







சில நாட்களுக்கு முன்பு, ஷகிலா இன்ஸ்டாகிராமில் மிளாவின் புகைப்படங்களை நீக்கியது பரபரப்பாக பேசப்பட்டது. அது குறித்து கேட்ட கேள்விக்கு மிளா, தொடர்ந்து ஷூட்டிங் இருந்ததால், பல நாட்களாக ஷகிலாவை சந்திக்க முடியவில்லை என்றும், அவர் சந்திக்க அழைக்கும்போது, இவர் ஷூட்டிங்கில் இருந்ததும், இவர் அழைக்கும்போது அவர் பிசியாக இருந்ததும், இருவரும் சந்திப்பதை வெகுவாக குறைத்தது என்று கூறியிருந்தார்.