தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாயிஷா. 'வனமகன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சூர்யா, ஆர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து முன்னணி இடத்தை பிடித்தார். ஆனால் அதே வேகத்தில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். 



ஷாக் கம்பேக் :


திருமணமான இரண்டே ஆண்டுகளில் அழகான பெண் குழந்தைக்கு தாயாகி குடும்பம் குழந்தை என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சாயிஷா யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்பு நடிப்பில் வெளியான 'பத்துதல' படத்தில் 'ராவடி' என்ற ஐட்டம் பாடல் ஒன்றுக்கு செம்ம ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கம்பேக் கொடுத்தார்.  தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. 


சாயிஷா யூடியூப் சேனல் :


சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா, யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தன்னுடைய ட்ராவல், குழந்தை சேட்டைகள், சமையல், டான்ஸ் என பல வீடியோக்களை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். சாயிஷாவின் யூடியூப் சேனலை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்ஸ் பாலோ செய்கிறார்கள். அவர் பதிவிடும் வீடியோ ஒவ்வொன்றும்  லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் போஸ்ட் செய்து வருகிறார்கள். 


 



வெள்ள பாதிப்பு :


மிக்ஜாம் புயலால் தன்னுடைய ஏரியாவிலும் வெள்ளம் சூழ்ந்ததாக கூறிய சாயிஷா அதன் வீடியோவையும் பகிர்ந்து இருந்தார். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்ற பிறகுதான்  நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை உணர்ந்தேன். நாங்கள் இருக்கும் ஏரியா மிகவும் தாழ்வான பகுதியில் இல்லை என்பதால் வெள்ளம் வந்தாலும் எங்கள் பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட வீட்டின் படி வரை மழை நீரானது நிரம்பிவிட்டது. 


இதை விட மோசமான பல சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்து இருக்க கூடும். வெளியில் சென்று மக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். ஆனால் வீட்டில் ஒரு குழந்தை இருப்பதால் வெளியில் வரவே பயமாக இருந்தது. நீங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என தன்னுடைய வீடியோ மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலம் குறித்து விசாரித்தார் சாயிஷா.