தாய் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகையான சரண்யா பொன்வண்ணன், தனது திரைப்பட வாழ்க்கை குறித்தும் அஜித் மற்றும் ஜீவா குறித்தும் சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
”அஜித் இருப்பாருனு நெனச்சேன்”
கிரீடம் படத்தில் அஜித்-உடன் நடிக்கும் போது ரொம்ப கெத்தா இருப்பாருனு நெனச்சேன், ஆனா தங்கமான மனசுள்ள குழந்தையா இருந்தாரு. அழகன்னா அவருதான் என்றும் மிகவும் எளிமையாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சீன் நடிக்கும் போது, சில வசனங்களை அவங்க சொன்னா நல்லா இருக்கும்னு சொல்ல சொல்லுவாரு. அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவர் என்று அஜித் குறித்து சரண்யா தெரிவித்துள்ளார்
”ஜீவாவும் நானும் நிறைய பேசியிருக்கோம்”
ராம் திரைப்படம் குறித்து தெரிவிக்கையில், கொடைக்கானலில் பல நாள் இருந்தோம். அப்போது சூட்டிங் மாதிரி இல்லாம ஜாலியா இருந்தோம். அப்போ ஒரு நாளைக்கு கொஞ்ச சீன் தான் எடுத்தோம். அப்போ நானும் ஜீவாவும் கதை பேசிட்டே இருந்தோம். யாருட்டையும் இப்படி கதை பேசினது இல்லை. ஜீவா, குழந்தையிலிருந்து எல்லாம் நடந்ததை எல்லாம் சொல்லியிருக்காரு, நானும் என் கதை சொல்லிருக்கேன். அது ஒரு மறக்க முடியாத ஜாலியான அனுபவம் என்று தெரிவிக்கிறார்.
நாயகன், படத்துல நடிக்கும் போது, ஒரு சம்பவம் நடந்தது என்றும், கோயிலில் தாலி கட்டுற சீன்ல, உண்மையா அழ வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் சொல்லிவிட்டார். ஆனா எனக்கு சிரிப்பு வந்துருச்சு, சிரிச்சிட்டேன் இருந்தேன். நீ அழிகின்ற வரை காத்திருக்கிறோம்னு, மணிரத்னம் சொல்லிட்டு போயிட்டாரு. என் அப்பாவும் அழுதுதான் ஆனோம்னு சொல்லிட்டாரு. ஆனால் அமீர் படத்தில் உங்களுக்கு எப்போ அழுக வருதோ சொல்லுங்க, அப்போ அழுகிற சீன் எடுத்துக்கலாம் சொல்லி அமீர் வேலை வாங்கினார். எப்ப எந்த மூடல் இருக்குமோ, அந்த மூடுக்கு ஏத்த மாதிரி இயக்குநர் அமீர் வேலை வாங்கினார்.
கஷ்டமான திரைப்படம்:
எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்த திரைப்படம் என்றால், தவமாய் தவமாய் இருந்து. நான் வீட்டை விட்டு ரொம்ப நாள் கஷ்டப்பட்டு இருந்தேன். அப்போ என் குழந்தைக்கு ஒன்றரை வயது. அப்போது ஏன் இந்த சீன் இப்படி எடுக்கிறாங்கனு தெரியல. நகம் ஏன் வெட்டனும்னு கேட்டேன், சாப்பாடு ஊட்டும்போது தெரியலானு சொன்னாங்க. ஆனால் இன்று வரை கிராமத்து கதாபாத்திரத்திற்கு நல்ல பெயர் கிடைக்கிறது என்றால் தவமாய் தவமிருந்துதான். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் சேரன்தான் என திரைப்பட வாழ்க்கை குறித்து சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.