பிரபல இந்தி நடிகை சாரா அலிகான் பிரபல கிரிக்கெட் வீரருடன் உணவருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடியின் பேத்தியும்,பிரபல நடிகர் சயிஃப் அலிகான் மகளுமான சாரா அலிகான் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு கேதர்நாத் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கடந்தாண்டு சாரா அலிகான், அக்‌ஷய்குமார் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே படமானது தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் அவர் பிரபலமானார். 






இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாரா அலிகான் நடிகர்  கார்த்திக் ஆர்யனுடன் காதல் இருப்பதை ஒப்புக் கொண்டார். லவ் ஆஜ் கல் படத்தில் ஒன்றாக நடித்தப் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டு பிரிந்தது. சமீபத்தில் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்ற சாரா முன்னாள் காதலன் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.






இந்நிலையில் வீடியோ ஒன்றில் சாரா அலிகான் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் ஹோட்டலில் உணவருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஸ்டியனில் சாராவைப் பார்த்தேன் என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. இதனைப் பார்த்த ஒரு இணையவாசி, என்ன நடக்கிறது? என்றும், மற்றொருவர், சாரா டெண்டுல்கரை சுட்டிக்காட்டி ஒரு கிரிக்கெட் வீரரின் மகள் (சாரா டெண்டுல்கர்) முதல் கிரிக்கெட் வீரரின் பேத்தி (சாரா அலி கான்) வரை கிண்டலாக தெரிவித்துள்ளார். 






இதே சுப்மன் கில் தான் ஏற்கனவே பிரபல முன்னாள் இந்திய அணி வீரர் சச்சினின் மகளான சாரா டெண்டுல்கரை காதலிப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.