கடற்கரையில் பல வண்ண பிகினி டிரஸ் அணிந்த நடிகை சாரா அலிகான் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பாலிவுட் நடிகர் சையில் அலிகானின் மகள் சாரா அலிகான். இவர்,  ‘கேதார்நாத்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பிறகு, பல படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட, தனுஷூடன் ‘அத்ராங்கி ரே’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.


இந்த நிலையில், சாரா அலி கான் தனது கடற்கரை விடுமுறையின் புகைப்படங்கள் மூலம் சமூக ஊடகங்களில் சூடுபிடித்துள்ளார். நடிகை பல வண்ண பிகினியில் அழகாக இருக்கிறார் என கமெண்ட்டுகள் குவியும். அவர் பல வண்ண பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சாரா அலிகான் பயணம் செய்வதை விரும்புபவர். இதனால், அடிக்கடி தனது விடுமுறைகளுக்கு கடற்கரை பகுதிகளை தேர்வு செய்கிறார்.


அவரது சமீபத்திய புகைப்படங்களில், அவர் பல வண்ண பிகினியில் கடற்கரையில் இருப்பதை காணலாம். “சூரியன், கடல் மற்றும் மணல்” தனது புகைப்படங்களுக்கு கேப்ஷன் இட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.






 


இரண்டு நாட்களுக்கு முன்பு, சாரா அலி கான்,  குஜராத்தின் துவாரகதீஷ் கோயிலுக்குச் சென்றார். அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்தார். அந்தப் புகைப்படங்களும் வைரலாகின.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண