கோலிவுட் சினிமாவில் பலருக்கும் பரீட்சியமான நடிகை சங்கீதா. இளம் வயதிலேயே நடிக்க  வந்த சங்கீதா , கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தனது தாயை வீட்டில் இருந்து வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதற்கான காரணம் குறித்தும் , இளம் வயதில் தனது குடும்பத்தால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.






 


சங்கீதா பகிர்ந்ததாவது :


”எல்லா நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இருக்கும் ரொம்ப வருத்தமான ஒரு விஷயம் என்னன்னா... அவங்க பெற்றோர் சின்ன வயதிலேயே எங்களை  வெளியே கொண்டு வந்து நடிக்க வைக்குறாங்க. அந்த சம்பளத்துல ஒரு பெரிய  குடும்பமே வாழ்வாங்க. இப்படியே ஏ.டி.எம் மெசின் போல நம்மளை பயன்படுத்திட்டு இருப்பாங்க. ஒரு நாள் நமக்கென ஒரு வாழ்க்கைனு நாம போறப்போ , நம்மை அதுவரை கொண்டாடின நமது குடும்பம் நமக்கு எதிராக மாறிடுவாங்க.. ஏன்னா ஏ.டி.எம் மெசின்ல காசு வராது. அப்படித்தான் என் வாழ்க்கை. நான் எல்லோருக்கும் வேண்டியதை பண்ணிக்கொடுத்தேன் . அதை அவங்க சரியா பயன்படுத்திக்காம , ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டாங்க. இப்போ எனக்கு ஒரு குடும்பம் , குழந்தை இருக்கு அதை நான் பார்க்கனும். மறுபடி என்னிடம் வந்து கேட்குறாங்க. நான் கொடுக்குறேன் ஆனால் கொடுக்கும் அளவை குறைத்துக்கொண்டேன் . அதனுடைய வெளிப்பாடுதான் இது. எந்தவொரு பொண்ணும் அவங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே போனு சொல்லமாட்டாங்க. ஆனால் எங்க அம்மா தப்பா இருக்காங்க. அவங்க என் மேல் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாமே தப்பு. என் அம்மா எப்போ என்னை சினிமாவுக்கு விட்டாங்களோ அப்போதே என் குடும்பத்தில் யாருக்கும் மனசாட்சியே இல்லை அப்படிங்குறது தெரிஞ்சு போச்சு.13, 14 வயசுல நடிக்க வந்தேன். பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டுதான் வந்தேன். எனது சகோதர்கள் குடிகாரர்களா இருந்தாங்க. எங்க வீட்டுல நிறைய சண்டை நடந்திருக்கும் , அழுதுருப்பேன். ஆனால் அதே நேரத்துல ஹீரோவோட ரொமான்ஸ் பண்ணியிருப்பேன். அதனாலத்தான் நடிகையா இருப்பது அவ்வளவு சுலபம் இல்லை.என் சின்ன வயசுல நான் பள்ளிக்கு போகத்தான் ஆசைப்பட்டேன். நான் ரொம்ப முட்டாள்தனமா இருந்திருக்கேன். என்னை போல யாரும் முட்டாளா இருக்க கூடாது.  என் கணவர்தான் முதன் முதலா எனக்கு செக் எழுத கற்றுக்கொடுத்தாங்க. சில நடிகர் நடிகைகள் சாகும் வரையிலும் முட்டாளா, அடிமையா இருந்து இறந்து போயிருக்காங்க. அப்படியான சூழலில் நான் முழிச்சுக்கிட்டேன். 15 வருடங்கள் அவங்களுக்காக இழந்திருக்கேன். இனிமே எனக்காக என் குழந்தைக்காக வாழப்போறது சந்தோசம்“ என  மனம் திறந்திருக்கிறார் சங்கீதா.