Actress Sangavi | 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் சங்கவியுடைய குழந்தை இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

நடிகை சங்கவியின் குழந்தையின் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் சங்கவி. இவர் அமராவதி படத்தில் அஜித்துடன் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் இணைந்து ரசிகன் படத்தில் நடித்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில்  80 மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.  தமிழில் நடிகர் விஜய் உடன் அதிக படங்களில் சேர்ந்து கதாநாயகியாக  நடித்துள்ளார்.

Continues below advertisement

 மேலும் கமல், ரஜினி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவை போல் இவர் சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்துள்ளார்.  இவர் கோகுலத்தில் சீதை, தாய் வீடு, சாவித்திரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.2016ஆம் ஆண்டு மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை சங்கவி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2020ஆம் ஆண்டு  ஒரு பெண் குழந்தை பிறந்தது.தற்போது தனது குழந்தையுடன் நடிகை சங்கவி அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில்  குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மகள் சான்வியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அது தொடர்பான படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.  மேலும் அவருடைய மகள் தொடர்பான வீடியோவும் வேகமாக வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்க: மலையாள உலகின் ஏஞ்சல்.. இன்ஸ்டாவில் குவியும் லைக்ஸ்.. யார் இந்த அனார்கலி மரிக்கர்?

Continues below advertisement