அனார்கலி மரிக்கர் 1997 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர். இவரது தாய் லாலி பி.எம் மலையாள சினிமா உலகின் பிரபல நடிகை ஆவார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ரண்டு ( Randu) என்ற படம் வெளியானது.


இவரது தந்தை நியாஸ் மரிக்கார் ஒரு பிரபல புகைப்படக்காரர். அனார்கலி மரிக்கரின் மூத்த சகோதரி, லட்சுமி மரிக்கர் குழந்தை நட்சத்திரமாக  No. 1 Snehatheeram Bangalore North படத்தில் நடித்திருந்தார்.






திருவனந்தபுரத்தில் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில், கல்லூரிப்படிப்பை முடித்த அவருக்கு, தனது தோழியின் அண்ணனும், ஒளிப்பதிவாளரான ஆனந்த் சி.சந்திரன் மூலமாக,  ‘ஆனந்தம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, பிரபல நடிகர் ப்ரித்விராஜ் நடித்த விமானம் படத்தில் நடித்தார்.


 






இதனையடுத்து அமலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனார்கலி, ஆசிவ் அலி நடித்த மந்தாரம் படத்தில் நடித்தார். தொடர்ந்து பிரபல நடிகை பார்வதி நடிப்பில் வெளியான ‘உயரே’ படத்தில் பார்வதியின் சக விமானிஓட்டுநராக நடித்தார். இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயராம், விஜய் சேதுபதி நடிப்பில் மலையாளத்தில் வெளியான மார்கோனி மத்தாய் படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும், சுக்கர் குறும்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இவை மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் பிரபலமாகும் பாடல்களையும் ரீப்ரைஸ் வெர்ஷனாக மாற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனார்கலி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில்,  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம் பெற்ற  ‘நான் மழை’ பாடல், புஷ்பா படத்தில் இடம்பெற்ற  ‘ஸ்ரீவல்லி’ பாடல் ஆகியவற்றை ரீப்ரைஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப்பாடல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.