காதல் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. பலருக்கும் காதல் சந்தியா என்றால்தான் பரீட்சியம் . தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். சினிமாவிலும் தலைக்காட்டாமல் இருக்கிறார். கள்ளம் கபடமற்ற சிரிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த நடிகை சமூக வலைத்தளங்களிலும் அவ்வளவு ஆக்டிவ் இல்லை. கடந்த ஆண்டு சீரியல் எண்ட்ரி கொடுத்த சந்தியா பின்னர் எங்குதான் சென்றார் என அவ்வபோது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் சந்தியா , பிக்பாஸ் புகழ் சுஜாவருணி வீட்டின் கிருஸ்துமஸ் பண்டிகையின் போது கிளிக் செய்த புகைப்படத்தில் காணப்படுகிறார். சுஜா வருணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு , சிவாஜியின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர்,. சுஜா தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தனது நெருங்கிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர் . சுஜா வருணி மற்றும் சிவக்குமார் தம்பதிகள் . சந்தியா ,சுஜா மற்றும் சிவக்குமார் இருவருக்கும் நெருங்கிய தோழி என்பது புகைப்பட கிளிக்குகள் மூலம் புரிந்துக்கொள்ள முடிகிறது. சந்தியாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் , தற்போது அவர் சற்று உடல் எடை கூடியவராக காணப்படுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் குழந்தை போல் இருந்த நமது சந்தியாவா இப்போது இப்படி இருக்கிறார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆண்டுகள் கடந்தாலும் நாங்கள் எப்போதுமே இணைபிரியா நண்பர்களாக இருப்போம் என சுஜா வருணி புகைப்படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.