சினிமாவில் ஷூட்டிங் ஒன்றில் பெரிய ஹீரோ ஒருவர் தன்னிடம் ஆபாச படம் காட்டியதாக சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சின்னத்திரையில் வம்சம், சந்திரலேகா, அத்திப்பூக்கள், சந்தியா ராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சந்தியா ஜாகர்லமுடி. ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நான் தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். தமிழில் இல்லை. நாம் சினிமாவுக்கு செட் ஆக மாட்டேன். அதற்கு காரணம் என்னுடைய மைண்ட் செட் தான். நான் எல்லாரிடம் உடனடியாக பழகும் கேரக்டர் கிடையாது. சீரியல் என்றால் வருடக்கணக்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்ற வகையில் ஷூட்டிங் இருக்கும்.  சிலருக்கு சினிமாவில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நான் பணத்திற்காக வந்திருப்பதால் தான் சினிமாவை விட சீரியலே எனக்கு பெட்டர். நான் நடித்த படங்களில் சிலவற்றில் சம்பளம் கொடுக்கவில்லை. சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்பு வரும். ஆனால் என்னை யாருன்னே தெரியாமல், வசனம் பேச தெரியுமா என்றெல்லாம் கேட்கிறார்கள். 

சில பேர் என்னிடம் போனில் அட்ஜஸ்மெண்ட் பண்ண முடியுமா என நேரடியாக கேட்பார்கள். நான் அவர்களிடம் படம் தானே எடுக்குறீர்கள், இல்லை வேறு எதாவதா என கேட்டு விடுவேன். சின்ன வயதில் இப்படி கேட்கும்போது நிறைய கோபம் வரும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒருமுறை அட்ஜஸ்ட் கேட்டவனிடம், உனக்கு அம்மா, அக்கா, தங்கச்சி இல்லையா என கேட்டு விட்டேன். அவனோ எல்லாரும் இருக்காங்க, உன்னை மாதிரி ஒரு அழகான மனைவி இல்லை என சொல்லி விட்டான். அதில் இருந்து அப்படி கேட்பதை விட்டு விட்டேன்.

Continues below advertisement

படங்களைப் பொறுத்து அட்ஜஸ்மெண்ட் என்பது அதிகமாகவே உள்ளது. நான் நடித்த படங்களில் நடந்துள்ளது. ஒரு பெரிய நடிகரைப் பற்றி சொல்கிறேன். அவர் பெயரை கூற மாட்டேன். அது ஒரு தமிழ் படம். சீரியலில் இருந்து வந்ததால் சினிமா ஷூட்டிங்கில் கொஞ்சம் அடக்கமாக நடந்துக் கொண்டேன். அதன் ஷூட்டிங்கில் அந்த பெரிய ஹீரோ முதலில் நார்மலாக என்னிடம் நலம் விசாரித்தார். 

அவர் அருகில் நான் உட்கார்ந்திருந்தேன். போனில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவர் செம காமெடி இதை கொஞ்சம் பார்றேன் என சொல்லி ஆபாச படத்தைக் காட்டி விட்டார். எனக்கு செம அதிர்ச்சியாகி விட்டது. அவர் மிகவும் பிரபலமான நடிகர். நான் அந்த இடத்தை விட்டு கோபத்தில் எழுந்து சென்று விட்டேன். இப்படி கசப்பான சம்பவங்கள் சினிமாவில் நடைபெற்றுள்ளது” என சந்தியா ஜாகர்லமுடி கூறியுள்ளார்.