ஜன நாயகன்
நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜன நாயகன். எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ,பாபி தியோல் , பிரியாமணி , மமிதா பைஜூ , கெளதம் மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இப்படத்தோடு விஜய் சினிமாவில் இருந்து விடைபெற்று அரசியல் செயற்பாடுகளில் களமிறங்க இருக்கிறார். இதனால் படத்தின் மீது எக்கசக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படியான நிலையில் ஜன நாயகன் படக்குழு மீது நடிகை சனம் ஷேடி அதிருப்தி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஜன நாயகன் படம் பற்றி சனம் ஷெட்டி
தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரவலாக அறியப்பட்டார். சன்ம் ஷெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் " சிவனேனு நான் இருந்தாலும் என்ன தேடி பிரச்சன வருது. என்னோட உழைப்பு என்னோட திறமையை அவமானப்படுத்துகிறது. தளபதி விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடிப்பதற்கு கடந்த 6 மாதங்களாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். எனக்கு தெரிந்தவர்களின் மூலம் படத்தில் வேலை செய்யும் உதவி இயக்குநரின் எண் கிடைத்தது. அவரிடம் கேட்டபோது ஒரு கேரக்டர் இருக்கிறது என்று சொன்னார். தவறான வழியில் பாலியல் ரீதியாக எதுவும் எனக்கு தொல்லை கொடுக்கவில்லை. அதற்கு நானே ஃபுல்ஸ்டாப் வைத்துவிடுவேன். இப்போது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது இன்று மீண்டும் படக்குழுவை தொடர்புகொண்டபோது தான் கடந்த 4 மாதங்களாக என்னை அலைய வைத்திருக்கிறார்கள் என்பது இன்று எனக்கு தெரிய வருகிறது. சான்ஸ் கூட வேண்டாம் படத்தின் இயக்குநரை நேரில் பார்க்ககூட வாய்ப்பு தரவில்லை. இயக்குநர் என்ன மார்சிலா இருக்கிறார். உங்கள் படங்களில் எப்போதும் ரெண்டு ஹீரோயின்களை மட்டும்தான் நடிக்க வைப்பீர்கள் ஏனால் அவர்களுக்கு மார்கெட் இருக்கிறது . எங்களுக்கு இல்லை. இந்த விஷயம் தளபதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை அவர் கவனத்திற்கு கொண்டு வரதான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். " என சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்