இதுதான் என் சைஸ்...அங்க அளவை ஓப்பனாக சொன்ன சமீரா ரெட்டி..
நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வர்க் அவுட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து வெடி, வேட்டை, அசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் பெரிய அளவில் படங்கள் கைகொடுக்கவில்லை என்றாலும் இந்தி, தெலுங்கு, பெங்காலி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்துள்ளார் சமீரா ரெட்டி. கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் சமீரா ரெட்டி. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக கைவிட்டு தனது குடும்பத்துடன் பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடுல் ரீல்ஸ் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் செம போல்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளா சமீரா ரெட்டி
அங்க அளவுகளை சொன்ன சமீரா ரெட்டி
சமீரா ரெட்டி சமீபத்தில் வர்க் அவுட் செய்யத் தொடங்கியுள்ளார். தான் ஜிம்மில் வர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்ட சமீரா ரெட்டி தன்னுடைய அங்க அளவுகளையும் போல்டாக தெரிவித்துள்ளார் . தனது பதிவின் கேப்ஷனில் 90Kg , 43 - 37.5 - 44 சொல்லிட்டேன் போதுமா என கேப்ஷனிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Just In




கடந்த ஆண்டு முழுவதும் தனது உடல் மீது பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றும் இந்த அண்டு நிறைய உடற்பயிற்சியும் யோகாவும் செய்ய இருப்பதாகவும் சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். இது தனக்கு மிக சவாலாக இருக்கப்போவதாகவும் தனது ரசிகர்கள் தனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார்.