டாம் பாய் லுக்கில் இருக்கும் சமந்தா - வைரலாகும் வீடியோ

ஆன்மீக சுற்றுலாவை முடித்து கொண்ட சமந்தா, இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார்.

Continues below advertisement

கடந்த சில நாட்களாக ஆன்மீக சுற்றுலாவில் இருந்த சமந்தா, தலைமுறையை குறைத்து புதிய ஹேர்ஸ்டைலில் டாம் பாய் லுக்கில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் சமந்தா தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இந்தி வெப் தொடர்களிலும் நடித்து வரும் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஏராளம். விவாகரத்துக்கு பிறகும் இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த சமந்தா மையோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். தனதுக்கு ஏற்பட்டுள்ள நோயின் பாதிப்பு குறித்து பேசிய சமந்தா, பேட்டி ஒன்றில் அழுதது  ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்ட சமந்தா, தான் நடிப்பதாக ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். புதிய படங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள குஷி படம் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ரிலீசாக உள்ளது. இதேபோல், சிட்டாடல் என்ற இந்தி வெப் தொடரில் சமந்தா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், சினிமாவில் நடிப்பதில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க சமந்தா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைவெளி நாட்களில் தன்னுடைய சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்க செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புதிய படங்களின் நடித்து முடித்த நிலையில், ஆன்மீக சுற்றுலாக்களில் சமந்தா ஈடுபட்டு வந்தார். அண்மையில் ஈஷா யோகா மையத்தில் ஆன்மீக தியானத்தில் சமந்தா இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. ஆன்மீக சுற்றுலாவை முடித்து கொண்ட சமந்தா, இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார். ட்ரீம்ஸ் ஆன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தொப்பையை அணிந்தப்படி இருக்கும் புகைப்படத்தையும், தோழியுடன் இருக்கும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்து இருந்தார். 

தற்போது வேற லுக்கில் இருக்கும் சமந்தாவின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்ஸ்டகிராமில் சமந்தா வெளியிட்ட வீடியோவில், தலைமுடியை சிறிதாக குறைத்து டாம் பாய் லுக்கில் உள்ளார். அதை பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு பாசிட்டிவ் கமெண்ட் செய்து வருகின்றனர். சமந்தாவின் புதிய லுக்கை பார்த்த நடிகை ஹன்சிகா எப்பொழுதுமே நீங்கள் அழகு தான் என கமெண்ட் செய்துள்ளார்.

Continues below advertisement