தளபதி 69


தி கோட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு பக்கம் அரசியல் செயற்பாடுகள் இன்னொரு பக்கம் தனது 69 ஆவது படத்திற்கு தயாராகி வருகிறார். இது விஜயின் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. வெற்றிமாறன் , கார்த்திக் சுப்பராஜ் , அட்லீ , என ஒவ்வொருவர் ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள். தற்போது தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்கவிருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக எச் வினோத் கமலை இயக்கவிருந்த நிலையில் அந்த படம் கைவிடப் பட்டது. அடுத்தபடியாக எச் வினோத் கார்த்தியின் தீரன் 2 ஆம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. தற்போது எச் வினோத் விஜயின் கடைசிப் படத்தை இயக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான கே.வி.என் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை  தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தீரன் , சுல்தான் , கைதி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது


விஜயுடன் இணையும் சமந்தா 


அதே நேரம் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெள்யாகியுள்ளன. முன்னதாக விஜயுடன் தெறி , மெர்சல் , கத்தி ஆகிய படங்களில் நடித்த சமந்தா தற்போது நான்காவது முறையாக விஜயுடன் இணைய இருக்கிறார். கடந்த ஓராண்டு காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டார் சமந்தா. மையோசிடிஸ் பாதிப்பு , திருமண முறிவு போன்ற தனிப்பட்ட காரணங்களால் சமந்தா இந்த முடிவை எடுத்தார். தற்போது மீண்டும் அடுத்து நடிக்கவிருக்கும் கதைகளை தேர்வு செய்து வருகிறார் சமந்தா. 






முன்னதாக இந்தியில் ஷாருக் கான் நடிக்க இருக்கும் படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது விஜயுடன் சமந்தா இணையவிருக்கும் தகவல் சமந்தா ரசிகர்களுக்கு உற்சாக அளித்துள்ளது. நீண்ட நாட்களாக திரையில் வராத சமந்தாவுக்கு கம்பேக் ஆக அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்கள் அமைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது