தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.  கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைத்தான்யாவை திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு பிறகு கணவருடன் ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.அவ்வபோது சினிமா ஷூட்டிங்கிற்காக வரும் சமந்தா தான் பிறந்த சென்னையை எட்டிப்பார்கிறார்.  திருமணமான பிறகும்  பல முன்னணி நடிகர்களுடன்  தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் வெளியான “தி ஃபேமிலி மேன் “ இரண்டாம் பாகத்தில் “ஈழ தமிழ் பெண்ணாக “ நடித்திருந்தார். இந்த படம் இந்தி மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழ் , தெலுங்கு போன்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.  இந்த வெப் சீரிஸ் மீதும் இதில் நடித்த சமந்தா மீதும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்புகள் கிளம்பின.இந்த விமர்சனம் குறித்து பதிலளித்த சமந்தா ” இலங்கை தொடர்பான ஆவண படங்களை எனக்கு இயக்குநர் தரப்பில் போட்டுக்காட்டினர், அந்த காட்சிகளை பார்த்த உடன் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை, அதன் பிறகுதான் நான் இந்த சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டேன் “ என தெரிவித்தார் இது ஒரு புறம் இருக்க சமந்தா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் என  அவரை ரசிகர்கள்  கொண்டாடவும் தவறவில்லை. 



இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ”பாகுபலி” என்ற பிரம்மாண்ட படத்தை   இயக்கியிருந்தார் இயக்குநர் ராஜமவுலி.  அந்த படத்தில் பிரபாஸ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்ட பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்பொழுது அதே காதாபாத்திரங்களை கொண்டு  சரித்திரக்கதை ஒன்றை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி. இதனை பிரபல ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த வலிமையான கதாபாத்திரமான “ ராஜமாதா சிவகாமிதேவியின்” இளம் பருவத்தை உள்ளடக்கியதாக இருக்கும் இதன் கதை என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளில் இந்த புதிய சீரிஸ் உருவாக உள்ளதாம்.




இந்த கதையில் இளம்வயது “சிவகாமி தேவியாக” நடிக்கவே இயக்குநர் தரப்பில் இருந்து பேசுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சமந்தா புதிய வெப் சீரிஸில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் படங்களில் மட்டுமே சமந்தா நடித்து வருகிறார். மேலும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதிலேயே அதிக நாட்டம் காட்டி வருவதாகவும் சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். சமந்தா தற்பொழுது காத்து வாக்குல ரெண்டு காதல்,சகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.