தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில்  அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக தகவல்கள் வெளியானது. ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருக்கிறார். மேலும், இந்த ஒரு வருடமும் தன் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும்,  உடல் நலனை தேற்ற சிகிச்சை எடுக்க போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.



இந்நிலையில்  நடிகை சமந்தா,  விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீசுடன் வேலூர் தங்க கோவிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஜெகதீஷ் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் சமந்தா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். ஆசி பெற்ற சமந்தாவுக்கு அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் குணமடைந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். சீட்டடல் என்ற வெப் சீரிஸ் படபிடிப்பை நடிகை சமந்தா சமீபத்தில் முடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் சாந்தா என்ன செய்யப் போகிறார் என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் அவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.


மேலும் படிக்க 


எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறை சோதனை...முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு


ஜனநாயகத்தை அழிக்க முயற்சி..ஒன்றாக சேர்ந்து போராடுவோம்...எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே முழக்கம்