நடிகை சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து புகழ்ந்து தள்ளிய நடிகை சமந்தா. 


நடிகை சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து  அவரை பாராட்டியிருந்தார்.  நீங்கள் நடனமாடும்போது, உங்கள் மேலிருந்து என் பார்வையை வேறு எங்கும் அகற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு சமந்தா பேசியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






நடிகை சாய் பல்லவி தனது ஹோம்லி லுக்கால் தென்னிந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கிறார். இவர் கோயம்பத்தூரை சேர்ந்தவர் ஆவார். இவர் 2008 -ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 2015- ஆம் ஆண்டு  மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு ரசிகர் பட்டாளத்தையே பெற்றார். அதில் இவர் ஏற்று நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஏராளமான இளம் ரசிகர்களை பெற்றார். இப்போதும் இவரை  மலர் டீச்சர் என்று ரசிகர்கள் அழைக்க அந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் தான் காரணம். சாய்பல்லவி இதனையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விராட பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். 


சமீபத்தில் சாய் பல்லவியின் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம்  வெளியானது. பிரபலங்கள் பலரும் சாய்பல்லவியின்  நடிப்பை பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில்  நடிகை சமந்தா  நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சாய்பல்லவியின் நடனத்தை  பார்த்து பாராட்டியது தொடர்பான வீடியோ  தற்போது சோசியல் மீடியாவில் வலம் வருகிறது.  அது மட்டும் இல்லாமல், நீங்கள் டான்ஸ் ஆடும்போது உங்கள் மீது  இருந்து என் கண்களை அகற்ற முடியவே இல்லை என்றெல்லாம் சமந்தா கூறியிருக்கிறார். சமந்தா பேசிய இந்த வீடியோதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.