Samantha: ரிஸ்க் எடுக்க தயங்காத சமந்தா..ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!
யசோதா பட ஹீரோயின் நடிகை சமந்தா தனது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இன்று உடற்பயிற்சி செய்வது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடற்தகுதியின் மேல் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள். கச்சிதமான ஸ்லிம் பாடிக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையாகவும் மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்களின் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை சமந்தாவின் பிட்னெஸ்கான சீக்ரெட் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Just In





யசோதாவின் வெற்றி :
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் ஹரிஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் 'யசோதா'. இப்படம் உலகளவில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆஃபீஸிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஒரு கர்ப்பிணி பெண்ணாக நடிகை சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதை. இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சியின் உருவம் சமந்தா :
சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள பல பிட்டஸ்ட் நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் மயோசிடிஸ் எனும் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கு அவரின் விடாமுயற்சியும் உறுதியான மனதைரியமும் தான் காரணம். தனது வேலைகளில் எத்தனை பிஸியாக இருந்தலும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குபவர் அவர். தனது படங்களிலும் வாழ்க்கையும் ரிஸ்க் எடுக்க ஒரு போதும் தயங்கியதில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த திரைப்படம் யசோதா.
ஒரே நாளின் எந்த ஒரு மாற்றமும் நடைபெறாது. தொடந்து விடாமுயற்சியுடன் செய்யப்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தவறாமல் உடற்பயிற்சிக்காக சிறிது நேரத்தையாவது ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பது தான் நடிகை சமந்தாவின் சீக்ரெட் தாரக மந்திரம்.