சமந்தா

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது தயாரிப்பாளராக களமிறங்க இருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ட்ரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சமந்தா. சமந்தா தயாரிப்பில் சுபம் என்கிற படம் தற்போது உருவாகி வரும் மே 9 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரியா கொந்தம், சரண் பெரி, ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி மற்றும் வம்ஷிதர் கவுட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

Continues below advertisement

மேடையில் கண் கலங்கிய சமந்தா

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது அப்போது மேடையில் அமர்ந்திருந்த சமந்தா திடீரென்று கண் கலங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மை காலங்களில் சமந்தா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கண் கலங்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றன. சமந்தா இன்னும் தனது திருமணத்தில் இருந்து மீளவில்லை என்றும் அவரது உடல் நிலை சரியில்லை என்று பலவிதமான கருத்துக்கள் இது தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் சமந்தா இதற்கு விளக்கமளித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். 

விளக்கமளித்த சமந்தா

Continues below advertisement

" அடிக்கடி நான் மேடைகளில் கண் கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் ஆவதால் இல்லை. பிரகாசமான வெளிச்சத்தை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது. அதனால் அப்படி துடைக்கிறேன். நான் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழவில்லை. நான் அழுவதாக பலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்" என இந்த வீடியோவில் சமந்தா விளக்கமளித்துள்ளார்

ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படத்தின் மூகம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சமந்தா. தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , இந்தி என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்தார். சமந்தா கடைசியாக நடித்த சாகுந்தலா , குஷி ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில் சினிமாவில் இருந்து ஓராண்டு காலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். சமந்தா வருன் தவான் நடிப்பில் கடந்த ஆண்டு சிடெடல் தொடர் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த தொடர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது தெலுங்கி ' மா இண்டி பங்காரம் ' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.