Samantha: இரண்டாவது திருமணம் தேவையா? புள்ளி விவரத்துடன் விளக்கம் கொடுத்த சமந்தா!

Samantha : இரண்டாவது திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு புள்ளி விவரத்துடன் நடிகை சமந்தா பதில் அளித்துள்ளார்.

Continues below advertisement

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பேவரைட்டான நடிகையான சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஸ்பை வெப்-சீரிஸின் இந்திய பதிப்பு 2024ம் ஆண்டில் திரையிட தயாராகி வருகிறது. இத்தொடரில் நடிகர் வருண் தாவனுடன் ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் 'சென்னை ஸ்டோரிஸ்' திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். தனது கரியரில் மேலே உயர உயர பறந்து கொண்டு இருக்கும் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது இரண்டாவது திருமணம் குறித்த கேள்விக்கு புள்ளிவிவரத்துடன் பதில் அளித்துள்ளார். 

Continues below advertisement

 


திருமணம் முதல் விவாகரத்து வரை :

 நடிகை சமந்தா ரூத் பிரபு - நடிகர் நாக சைதன்யா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இருவரும் அவரவரின் கரியரில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகின்றனர்.

ரசிகரின் கேள்வி :

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டகிராம் பக்கம் மூலம் 'Ask me anything' என்ற கேள்வி பதில் செஷன் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளித்து வந்தார். அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் "மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து நீங்கள் ஏன் இன்னும் யோசிக்கவில்லை?" என கேள்வி கேட்டு இருந்தார். "புள்ளிவிவரங்கள் படி அது தவறான முடிவாக போய்விடும்" என அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகை சமந்தா.

 

புள்ளிவிவரம் சொல்வது என்ன?

மேலும் தனது பதிலுடன் 2023ஆம் ஆண்டுக்கான விவாகரத்து புள்ளி விவரத்தையும் பகிர்ந்து இருந்தார். ஆந்த புள்ளிவிவரத்தின் படி முதல் திருமணங்கள் 50% விவகாரத்தில் முடிவடையும், இரண்டாவது திருமணம் 67% மற்றும் மூன்றாவது திருமணம் 73% விவகாரத்தில் முடியும். இது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொருந்தும் என அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola