சமந்தா


சமீபத்தில் ஐ.எம்.டி.பி தளம் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பிரபலங்களின் பட்டியலில் சமந்தாவின் பெயர் 13வது இடத்தில் இருந்தது. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படம் தவிர்த்து  கடந்த ஓராண்டு காலமாக சமந்தா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக புகழ் வெளிச்சத்தில் இருந்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனத் இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். 


மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி பாதிப்பு, நாக சைதன்யாவுடன் திருமண முறிவு என சமந்தாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. தனது உடல் மட்டும் மன ஆரோக்கியத்தை முக்கியமாகக் கருதிய சமந்தா கடந்த ஓராண்டு காலமாக ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் யூடியுப் சேனல் ஒன்றில் தனது மனநல ஆரோக்கியம் குறித்து உடல் ரீதியான ஆரோக்கியம் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பேசி வருகிறார். 


ஆரோக்கியமற்ற பொருட்களை விளம்பரம் செய்தது குறித்து சமந்தா


சமந்தா பங்கேற்கும் இந்த யூடியுப் நிகழ்ச்சி அவ்வப்போது சில விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. தவறான மருத்துவ ஆலோசனை வழங்குவதாக பலர் இந்த நிகழ்ச்சியை முன்பு குற்றம் சாட்டியிருந்தார்கள். இதனைத் தொடர்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவை ஆரோக்கியமற்ற பொருட்களை விளம்பரப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமந்தா “இதற்கு முன்பு நான் சில தவறுகளை செய்தது உண்மைதான். ஆனால் அவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நான் செய்த தவறுகள். உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்புணர்வுடன் இருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.


சமந்தா நடித்து வரும் படங்கள்






சமந்தா தற்போது ஹாலிவுட்டில் வெளியான Citadel இணையத் தொடரின் இந்தி பிரதியில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பங்காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கவிருக்கும் விஜய்யின் தளபதி 69 படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா நான்காவது முறையாக இணையவிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.