தனது தங்கை பூஜா கண்ணனின் திருமண நிச்சயத்தில் சாய் பல்லவி தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.


சாய் பல்லவி வீட்ல விசேஷம்!




சாய் பல்லவி தற்போது  தனது தங்கை பூஜா கண்ணனின் திருமணக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளார். சாய் பல்லவியின் இளைய சகோதரியான பூஜா கண்ணன், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான சித்திரை செவ்வானம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. எனினும் தன் அக்கா சாய் பல்லவியுடன் இணைந்து புகைப்படங்கள் பகிர்வது, சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பது என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு அவர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார்.


இதனிடையில் பூஜா கண்ணனும் வினீத் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.  தற்போது இந்த இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பொதுவாக பகிர்ந்தார். இந்தத் திருமண நிச்சயத்தில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி தனது நண்பர்கள் உறவினர்களுடன் திருமண வீட்டை களைகட்ட வைத்து வருகிறார்.


அவள் இல்லாமல் நான் தாக்குபிடித்திருக்க மாட்டேன்


சில நாட்கள் முன்பு பூஜா கண்ணன் தனது சகோதரி சாய் பல்லவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தனது அக்கா இல்லாமல் அந்த நாளில் தன்னால் எல்லாவற்றையும் தாக்குபிடித்திருக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார். மனப்பெண்ணான பூஜாவுக்கு அலங்காரம் செய்வதில் இருந்து எல்லா நேரங்களிலும் உடன் இருக்கும் சாய் பல்லவியின் க்யூட் வீடியோ ஏற்கெனவே வைரலாகியுள்ளது.


ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!


பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த காணொளிகள் ரீல்ஸ்களாக வரிசையாக வெளிவந்தபடி இருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மாப்பிள்ளை பெண் வீட்டார் இருவரது குடும்பங்களுடனும் இணைந்து நடிகை சாய் பல்லவி ஆடி அசத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீடியோவாக மாறியுள்ளது.


 






தற்போது சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.