விஜயுடன் இந்த போட்டி போடனும்...சாய் பல்லவிக்கு இப்படி ஒரு ஆசையா
சாய் பல்லவி நாக சைதன்யா நடித்து தெலுங்கில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது

சாய் பல்லவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இப்போது வளர்ந்திருப்பவர் சாய் பல்லவி. கஸ்தூரி மான் என்கிற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு தாம் தூம் திரைப்படத்தில் கங்கானாவின் தங்கையாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானாலும் இவருக்கு கதாநாயகி அந்தஸ்தை பெற்று தந்தது, மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் தான். இதை தொடர்ந்து தமிழில் தன்னுடைய முதல் படமான தியா படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார் சாய் பல்லவி. பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே, உட்பட சமீபத்தில் வெளியான அமரன் முதல் கொண்டு தனித்துவமான நடிப்பால் மிரட்டி இருந்தார். கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம், சாய் பல்லவிக்கு இதுவரை தமிழில் எந்த ஒரு படமும் பெற்று தந்திடாத பெயரை கொடுத்தது. இந்த ஆண்டு தேசிய விருதுக்கு சாய் பல்லவி தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயுடன் சேர்ந்து நடனமாட வேண்டும்
அமரன் திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் சாய் பல்லவி நடித்து தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் தண்டேல். சந்து மொண்டெட்டி இயக்கத்தில் நாகசைதன்யா சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் த்ரில்லர் படம் தண்டேல். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாய் பல்லவி நடிகர் விஜய் பற்றி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
Just In
நடிப்பு தவிர்த்து நடனத்தில் கலக்கும் சாய் பல்லவி தனக்கு ரொம்ப பிடித்த டான்ஸர் விஜய் என கூறியுள்ளார். விஜயுடன் சேர்ந்து நடனமாடி அவருடன் போட்டி போட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.