ஜெயம் படம் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை சதா. இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். சினிமாவிற்குள் எண்ட்ரியான அடுத்தடுத்த வருடங்களிலேயே எதிர் , வர்ணஜாலம் ,அன்னியன் , பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே என முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மகாராஷ்டிர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சதா, தமிழ் மொழிகள் மட்டுமல்லாது , கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான , டார்ச் லைட் என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து பலரின் பாராட்டை பெற்றவர் சதா. இவர் சினிமாவில் நடப்பதாக கூறப்படும் casting couch குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.







அதில் “ எனக்கு  casting couch  பற்றியெல்லாம் தெரியாது. என்னுடைய பெற்றோர்கள் எப்போதுமே என் கூட இருப்பாங்க. என்னை நேரடியாக தவறாக அணுக வாய்ப்பு இருந்தது இல்லை. ஆனால் போன்ல நடந்திருக்கு. நிறைய பேர் , கால் பண்ணி மறைமுகமா அப்படி சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க. எனக்கு அவங்க தவறாக அணுகுறாங்கன்னு தோன்றினால் நான் அழைப்ப துண்டிச்சுடுவேன். சினிமா ஒரு கிளாமர் இண்டஸ்ட்ரி, எல்லோருமே சினிமாவுல ஒரு அங்கமா இருக்கவும் , பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் வருவாங்க. அதை சிலர் தங்களுக்கு சாதகமாகவும் , தவறாகவும் பயன்படுத்திக்குறாங்க.


டார்ச் லைட் படத்துல நான் நடிக்க காரணம் ,  பாலியல் தொழிலாளிகளின் வலி நிறைந்த பக்கங்களை சொல்லுவதாக இருந்தது படத்தின் கதை. அதோடு இந்த கதை இமாஜின் பண்ணி எழுதியிருக்காங்கன்னு நினைத்தேன். அதன் பிறகுதான் சொன்னாங்க இது நிஜமா நடக்குற கதைதான்னு. ஆண் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கனும் , பெண்கள் பொருட்கள் கிடையாதுன்னு. “ என வெளிப்படையாக பேசியிருக்கிறார் சதா.