1981 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. பாரதிராஜா கண்ட நாயகிகள் மார்க்கெட்டை இழந்ததாக வரலாறு கிடையாதே! . கோலிவுட் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது ரேவதியை. அதன் பிறகு ரேவதிக்கு வந்த வாய்ப்பால் 80 மற்றும் 90 களில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். கண்களை உருட்டி உருட்டி ரேவதி பேசும் வசங்கள் இன்றைய கால இளைஞர்களையும் இன்ஸ்டாகிராமில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ரேவதியின் இயற்பெயர் ஆஷா. 70 - 80 களில் நடிகர் , நடிகைகளின் ஒரிஜினல் பெயர்களை மாற்றுவது என்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும் கூட தனது பெயர் மாற்றத்தில் ஆரம்பத்தில் தனக்கு துளியும் விருப்பம் இல்லை என்கிறார் ரேவதி.
அதில் “நான் அந்த பெயர் வைத்த பொழுது ரொம்ப அழுதேன். பிடிக்கவே இல்லை எனக்கு பெயர் மாற்ற வேண்டாம் அப்படினு சொன்னேன். என் அம்மா அப்பா வைத்த பெயர் ஆஷா. அதை எதுக்கு மாத்துறீங்க அப்படினு கேட்டேன். அதுக்கு ஏற்கனவே ஆஷா போன்ஷ்லே இருக்காங்க, ஆஷா பரேக் இருக்காங்க. இந்தி படத்துல நிறைய நடிகைகள் இருக்காங்க. அந்த பெயர் இங்கு எடுபடவே படாது அப்படினு சொன்னாங்க. நான் வேண்டாம்னு சொன்னேன். ரேவதினு பெயர் வைத்த பிறகு பத்திரிக்கைகளில் எல்லாம் ஆர்டிக்கிள் வந்தது. நான் சொன்னேன் எனக்கும் அந்த பெயருக்கும் சம்பந்தமே கிடையாதுனு. அவ்வளவு அடம் எனக்கு. அதன் பிறகு அந்த பெயரை என்ஜாய் பண்ண ஆரமித்துவிட்டேன். குடும்பத்தில் , நண்பர்கள் வட்டத்தில் ஆஷா. முதல் சில மாதங்களில் ரேவதினு யார் கூப்பிட்டாலும் திரும்பி கூட பார்க்க மாட்டேன். இப்போ வந்து பெயர்ல என்ன இருக்கு அப்படினு ஆயிடுச்சு!” என சில சுவாரஸ்யங்களை பகிர்ந்திருக்கிறார் ரேவதி