நடிகைகள் சிலர் பணத்துக்காக, பெயருக்காக, வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்துவிட்டு 10 வருஷங்களுக்கு அப்புறம் அவர் என்ன அங்க தொட்டார், இங்க தொட்டார் என்பதெல்லாம் பொய் என்று கூறியுள்ளார் நடிகை ரேகா நாயர்.


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம்  இரவின் நிழல்.  நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் இரவின் நிழல் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. 


இந்தப் படத்தில் ரேகா நாயரும் நடித்துள்ளார். சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேகா நாயர் அண்மையில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான  இவர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பார். அந்தக் காட்சி வரவேற்பையும் பெற்றது. விமர்சனங்களையும் பெற்றது. அது குறித்து அவர் ஒரு பேட்டியில் நான் நிர்வாணமாக நடித்தது எனது முடிவு. மேலும் அந்தக் காட்சியில் குழந்தைக்குப் பாலூட்டியிருப்பதுபோல் காட்சியிருக்கும். அதில் என்ன நிர்வாணம் இருக்கு என்று விளாசியிருந்தார்.


இந்நிலையில் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த ரேகா நாயர் மீ டூ சர்ச்சையை விளாசியிருக்கிறார்.


அந்தப் பேட்டியைக் கண்டவர் ஷகிலா. அவருடைய ஒரு கேள்விக்கு, ”அக்கா, நீங்களும் சினிமாத்துறையில் தான் இருக்கிறீர்கள். நீங்களும் நானும் வாயில் விரலை வைத்துக் கொண்டில்லை. ஒருவர் பேச்சும் பேச்சிலேயே நாம் அவர்களை கணித்துவிடுவோம் தானே. என்ன ரேகா ரொம்ப நாளாச்சு என்று ஒருவர் வழிந்தாலே அது எதுக்கு என்று தெரியும். ஒருத்தர் கூப்பிட்டால் பிடித்தால் போகப்போகிறார்கள். பிடிக்காவிட்டால் இருப்பார்கள். 


ஆனா, ஒரு படத்தை நடித்து 10 வருடம் கழித்து விட்டு அந்த இயக்குநர் என் மீது அங்க கை வைத்தார், இந்த இயக்குநர் இங்க கை வைத்தார் என்று கூறுவதை ஒத்துக்கவே முடியாது. அப்படின்னா பத்து வருடமாக என்ஜாய் செய்து கொண்டிருந்தீர்களா. 


ஆண்கள் பணம் கொடுக்கிறார்கள் என புகார் கூறுகிறீர்களே பெண்களும் என்ஜாய் செய்கிறார்கள் இதுவரைக்கும் எந்த டைரக்டரும் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு வான்னு கூப்பிடவில்லை, எனக்கு தெரிந்து ஒரு இயக்குநரோ அல்லது ஒரு நடிகையோ காதல் வயப்பட்டு அதில் உடலுறவு கொள்கின்றனர். அதைத் தாண்டி இன்று என்னுடன் நீ படுக்க வந்தால்தான் சூட்டிங் என்று யாரும் சொல்ல முடியாது” என்று ரேகா நாயர் கூறியுள்ளார்.




வைரல் வீடியோ:


அண்மையில் நடிகை ரேகா நாயரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனும் சண்டைப் போட்டுக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 


‘இரவின் நிழல்’ படத்தில் ரேகா நாயர் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அது குறித்து தவறான வகையில் விமர்சித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்தே இருவருக்கும் இந்த கைகலப்பு நடந்தது என்று திரை வட்டாரங்கள் தெரிவித்தன.


அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீடூவைப் பற்றி பேசியுள்ளார் ரேகா நாயர்.


Metoo -வின் அடிப்படையே புரியாமல் சர்ச்சையாக பேசி வருவதாக, ரேகா நாயரை விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்